4 'மாஜி' அமைச்சர்கள் காங்.,கில் இருந்து விலகல்

Added : நவ 17, 2021
Advertisement
ஜம்மு:ஜம்மு - காஷ்மீர் முன்னாள் அமைச்சர்கள் நான்கு பேர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், சமீப காலமாக உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதனால் அங்கு அவ்வப்போது ஆட்சி கவிழும் ஆபத்தும் ஏற்பட்டு வருகிறது.இதற்கிடையே, யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரிலும், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிவடைந்து

ஜம்மு:ஜம்மு - காஷ்மீர் முன்னாள் அமைச்சர்கள் நான்கு பேர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், சமீப காலமாக உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதனால் அங்கு அவ்வப்போது ஆட்சி கவிழும் ஆபத்தும் ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையே, யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரிலும், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிவடைந்து வருகிறது.கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள், அதிலிருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர்.இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் அமைச்சர்கள் நான்கு பேரும், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் கிடைத்து உள்ளன.

இவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை, கட்சித் தலைவர் சோனியா, ராகுல் மற்றும் ஜம்மு - காஷ்மீரின் கட்சிப் பொறுப்பாளருக்கும் அனுப்பினர்.அந்த கடிதத்தில், ஜம்மு - காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் மிர் மீதான புகார்களையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மாநில தலவைர் தங்களின் பிரச்னைகளை செவிகொடுத்து கேட்க தயாராக இல்லை என்றும், தங்களுக்கு எந்தவிதமான வாய்ப்பையும் அவர் வழங்குவதில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ராஜினாமா செய்துள்ள இவர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாதுக்கு நெருக்கமானவர்களாக கருதப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X