சிலவரி செய்திகள்...: இ்ந்தியா

Added : நவ 17, 2021
Share
Advertisement
கடை உரிமையாளர் கொலை புல்தானா:மஹாராஷ்டிராவின் புல்தானா மாவட்டம் சிக்லியில் 'எலெக்ட்ரானிக்ஸ்' கடை நடத்தியவர் கமலேஷ் பப்பட். நேற்று முன்தினம் இரவு கடைக்குள் புகுந்த இரு கொள்ளையர்கள், அவரை வாளால் வெட்டிக்கொலை செய்தனர். பின், அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை அள்ளிக்கொண்டு பைக்கில் தப்பினர். வழக்கு பதிவு செய்த போலீசார், கடையில் உள்ள கண்காணிப்பு 'கேமரா'வில் பதிவான

கடை உரிமையாளர் கொலை

புல்தானா:மஹாராஷ்டிராவின் புல்தானா மாவட்டம் சிக்லியில் 'எலெக்ட்ரானிக்ஸ்' கடை நடத்தியவர் கமலேஷ் பப்பட். நேற்று முன்தினம் இரவு கடைக்குள் புகுந்த இரு கொள்ளையர்கள், அவரை வாளால் வெட்டிக்கொலை செய்தனர். பின், அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை அள்ளிக்கொண்டு பைக்கில் தப்பினர். வழக்கு பதிவு செய்த போலீசார், கடையில் உள்ள கண்காணிப்பு 'கேமரா'வில் பதிவான காட்சிகள் உதவியுடன் கொள்ளையர்களை தேடுகின்றனர்.

விஸ்வநாதன் ஆனந்த் பற்றிய சினிமா

கோல்கட்டா:ஐந்து முறை உலக 'செஸ்' சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் நேற்று அதை உறுதி செய்த ஆனந்த், ''என் கேரக்டரில் அமீர் கான் நடித்தால் சிறப்பாக இருக்கும். என் வாழ்க்கை குறித்த தகவல்களை தயாரிப்பாளரிடம் கூறி உள்ளேன். விரைவில் திரைக்கதை பணி தொடங்கும். இயக்குனர் யார் என தற்போது கூற இயலாது. என் வரலாறு குறித்த சினிமா பல தகவல்களை தெரியவைக்கும். நிச்சயம் நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்,'' என்றார். ஏற்கனவே கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாகி உள்ளது.

சி.பி.ஐ., அதிகாரிகள் நியமனம்

புதுடில்லி:மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளான வித்யா ஜெயந்த் குல்கர்னி, கன்ஷியாம் உபாத்யாய் மற்றும் நவல் பஜாஜ் ஆகியோர் மத்திய புலனாய்வுப் பிரிவான சி.பி.ஐ.,யின் இணை இயக்குநர்களாக நேற்று நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் வித்யா ஜெயந்த் மற்றும் நவல் பஜாஜ் ஆகியோர் 5 ஆண்டுகளும், கன்ஷியாம் 2026 வரையிலும் இப்பதவியில் நீடிப்பர் என மத்திய பணியாளர் அமைச்சகம் அறிவித்து உள்ளது.

பலாத்காரம் செய்து மகள் கொலை

போபால்:மத்தியப் பிரதேசத்தின் போபால் மாவட்டம் சமஸ்கட் வனப்பகுதியில், சமீபத்தில் 8 மாத குழந்தை மற்றும் இளம்பெண் உடல்கள் கிடந்தன. போலீசார் விசாரணையில் ஓராண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து வீட்டில் இருந்து வெளியேறிய இளம்பெண்ணுக்கு, பிறந்த குழந்தை இறந்துள்ளது. தகவல் அறிந்த பெண்ணின் 55 வயது தந்தை, குழந்தையின் இறுதிச்சடங்கை நடத்த வனப்பகுதிக்கு மகளுடன் சென்றுள்ளார். அப்போது காதல் திருமணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த அவர், மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது; தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கால்கள் துண்டித்து கொலுசு திருட்டு

ராஜ்சமந்த்:ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டம் சார்புஜா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த கன்குபாய், 45, சமீபத்தில் வயலில் வேலை செய்த கணவருக்கு உணவு எடுத்துச்சென்றபோது மாயமானார். பின் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் மற்றொரு பகுதியில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த வெள்ளிக்கொலுசுகளுக்காக கால்களை வெட்டிய திருடன், பின் கழுத்தில் மிதித்து கொன்றுள்ளதாக போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X