மேலும் ஒரு இந்தியருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை

Added : நவ 17, 2021
Share
Advertisement
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில், மற்றொரு இந்திய வம்சாவளிக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், 15 கிலோவுக்கு மேல் 'ஹெராயின்' போதைப் பொருளை கடத்தி வருவோருக்கு, மரண தண்டனை விதிக்கப்படுவது சட்டமாகும். இங்கு 2009ம் ஆண்டு, மலேஷியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம், ஹெராயின் கடத்தி

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில், மற்றொரு இந்திய வம்சாவளிக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், 15 கிலோவுக்கு மேல் 'ஹெராயின்' போதைப் பொருளை கடத்தி வருவோருக்கு, மரண தண்டனை விதிக்கப்படுவது சட்டமாகும்.

இங்கு 2009ம் ஆண்டு, மலேஷியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம், ஹெராயின் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.கடந்த 10ம் தேதி நாகேந்திரனுக்கு விதிக்கப்பட இருந்த மரண தண்டனை, கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மலேஷியாவை சேர்ந்த மற்றொரு இந்திய வம்சாவளிக்கும், சிங்கப்பூரில் தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் 14 ஆண்டுகளாக முனுசாமி ராமமூர்த்தி, 39, என்பவர், துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் 2018ம் ஆண்டு 57.54 கிலோ ஹெராயின் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார்.

கடந்த வாரம், இவரை குற்றவாளி என தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், அவருக்கான தண்டனை விபரங்களை, கடந்த 15ம் தேதி வெளியிட்டது. அதன்படி முனுசாமிக்கு துாக்கு தண்டனை வழங்கி, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X