மேற்கு வங்க சட்டசபையில் உரிமை மீறல் தீர்மானம்

Added : நவ 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோல்கட்டா:அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் இருவர் மீது மேற்கு வங்க சட்டசபையில் உரிமை மீறல் தீர்மானம் நேற்று கொண்டுவரப்பட்டது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இம்மாநிலத்தில் நடந்த நாரதா ஊழல் வழக்கு தொடர்பாக, ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் மூவரை சி.பி.ஐ., அதிகாரிகள்

கோல்கட்டா:அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் இருவர் மீது மேற்கு வங்க சட்டசபையில் உரிமை மீறல் தீர்மானம் நேற்று கொண்டுவரப்பட்டது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இம்மாநிலத்தில் நடந்த நாரதா ஊழல் வழக்கு தொடர்பாக, ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் மூவரை சி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். அவர்கள் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.இதற்கு ஆளும் திரிணமுல் காங்., அரசு கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான தபஸ் ராய் சட்டசபையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது: எம்.எல்.ஏ.,க்கள் பிர்ஹாத் ஹகீம், மதன் மித்ரா, சுப்ரதா முகர்ஜி ஆகியோரை கைது செய்ய, சபாநாயகர் பிமன் பானர்ஜியின் அனுமதி பெறப்படவில்லை. அவருக்கு தகவல் கூட தெரிவிக்காமல் அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த செயல், சபாநாயகர் பதவியின் மாண்பை இழிவுபடுத்தி உள்ளது. எனவே, சி.பி.ஐ., துணை எஸ்.பி., சத்தியேந்திரா சிங், அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ரத்தின் பிஸ்வாஸ் ஆகியோர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இந்த தீர்மானம் குறித்து உரிமை குழு விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய சபாநாயகர் பிமன் பானர்ஜி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R VENKATARAMANAN - Chennai,இந்தியா
18-நவ-202113:48:33 IST Report Abuse
R VENKATARAMANAN They were arrested long back. No reaction was shown for a long period. What happened. what is the necessity to pass this resolution all of a sudden now? It is not that easy to escape from the clutches of the E.D
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X