கோவை:இலங்கை தாதா அங்கொடலொக்காவின் துப்பாக்கி மற்றும் டைரி எடுத்துச்சென்ற விவகாரத்தில், கூட்டாளிகள் இருவரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை தாதா அங்கொடலொக்கா, பிரதீப் சிங் என்ற பெயரில், கோவை சேரன் மாநகரில் தனது காதலி அம்மானி தான்ஜியுடன், 2018ம் ஆண்டு வசித்து வந்தார். கடந்தாண்டு மர்மமான முறையில் இறந்தார்.இது தொடர்பாக, அவரது காதலி உட்பட மூவரை சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, அங்கொட லொக்கா இறந்த பின், அவரை தேடி அவரது கூட்டாளியான, இலங்கையை சேர்ந்த சனுக்கா தனநாயகா, 38, என்பவர் கோவைக்கு வந்துள்ளார். தொடர்ந்து, அங்கொட லொக்காவின் காதலியை மிரட்டி, வீட்டில் இருந்த துப்பாக்கியை மற்றும் போதை மருந்து விவகாரம் தொடர்பான டைரியை எடுத்துச் சென்றுள்ளார்.
தலைமறைவாக இருந்த சனுக்கா தனநாயகா மற்றும் அவரது கூட்டாளி கோபால கிருஷ்ணன், 46, ஆகியோரை சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கைது செய்தனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, ஐந்து நாட்கள் 'கஸ்டடி' வழங்கப்பட்டது.
அவர்கள் இருவரையும், கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கொட லொக்காவின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் டைரி எங்கே, அவற்றை எடுத்துச் சென்றதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE