சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வக்கீல் வெட்டி கொலை மர்ம நபர்களுக்கு வலை

Added : நவ 17, 2021
Share
Advertisement
உத்தமபாளையம்:பைக்கில் வந்த வக்கீலை வழிமறித்து மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். தேனி மாவட்டம், கூடலுார் சுக்காங்கல்பட்டியை சேர்ந்தவர் மகன் மதன், 35; உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். நேற்று காலை 11:00 மணியளவில் பைக்கில் நீதிமன்றத்தில் இருந்து உத்தமபாளையத்திற்கு சென்றார். ஒன்றிய அலுவலகம் அருகே மர்ம நபர்கள் 'பொலீரோ' காரில் பின்னால்

உத்தமபாளையம்:பைக்கில் வந்த வக்கீலை வழிமறித்து மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர்.

தேனி மாவட்டம், கூடலுார் சுக்காங்கல்பட்டியை சேர்ந்தவர் மகன் மதன், 35; உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். நேற்று காலை 11:00 மணியளவில் பைக்கில் நீதிமன்றத்தில் இருந்து உத்தமபாளையத்திற்கு சென்றார். ஒன்றிய அலுவலகம் அருகே மர்ம நபர்கள் 'பொலீரோ' காரில் பின்னால் வந்து இடித்து கீழே தள்ளினர். பின் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

பலத்த காயத்துடன் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மதன் இறந்தார். போலீசார் மதன் உடலை பிரேத பரிசோதனைக்கு தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு எடுத்து செல்ல ஆம்புலன்சில் ஏற்ற தயாராகினர். இதற்கு மதன் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யவும், குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் ஆம்புலன்ஸை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே ஆய்வு செய்தார். உத்தமபாளையம் அருகே கோவிந்தன்பட்டியில் 2020ல் வழக்கறிஞர் ரஞ்சித் என்பவர் வெட்டிக் கொலை செய்யப் பட்டார். அந்த வழக்கில் மதன் சம்பந்தப்பட்டுள்ளார். எனவே முன்விரோதத்தில் கொலை நடந்ததிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.


வாலிபர் வெட்டி கொலை

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன், 21. பி.காம்., படித்துள்ளார். நண்பர் நந்தகுமார், 21, என்பவருடன் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து பைக்கில் வெளியே சென்றார்.


சிறிது துாரம் சென்ற நிலையில், ஆறு பேர் கும்பல் அவர்களை மறித்து அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டி தப்பியோடியது. படுகாயமடைந்த இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் யோகேஸ்வரன் நேற்று அதிகாலை இறந்தார். கும்பகோணம் கிழக்கு போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

யோகேஸ்வரன் கல்லுாரி படிக்கும் போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக, சிலர் அடிக்கடி வீட்டில் வந்து மிரட்டியுள்ளனர். சில மாதங்களுக்கு முன், யோகேஸ்வரன் பைக் திருட்டு போனது. இது தொடர்பான வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் இருந்து வெளியே வந்தவர்களும், சில நாட்களுக்கு முன் யோகேஸ்வரன் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளனர். இரு சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் தான், முன்விரோதம் காரணமாக கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X