துளிகள் செய்தி

தமிழ்நாடு

உண்டியல் காணிக்கையாக வந்த 53 லட்சம் ரூபாய்!

Added : நவ 17, 2021
Share
Advertisement
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உண்டியலில், 53.50 லட்சம் ரூபாய் காணிக்கையாக இருந்தது.மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், உண்டியல் எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில், பொது உண்டியலில், 53 லட்சத்து, 50 ஆயிரத்து, 784 ரூபாயும், 134 கிராம் தங்கமும், 2,890 கிராம் வெள்ளியும் இருந்தது. உண்டியல் எண்ணிக்கையை, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஹர்ஷினி,

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உண்டியலில், 53.50 லட்சம் ரூபாய் காணிக்கையாக இருந்தது.மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், உண்டியல் எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில், பொது உண்டியலில், 53 லட்சத்து, 50 ஆயிரத்து, 784 ரூபாயும், 134 கிராம் தங்கமும், 2,890 கிராம் வெள்ளியும் இருந்தது. உண்டியல் எண்ணிக்கையை, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஹர்ஷினி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை ஆணையர் (பொ) விமலா ஆகியோர் மேற்பார்வையிட்டனர். பழனி பக்தர்கள் பேரவையினர், உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். பொது உண்டியல் எண்ணி முடிப்பதற்குள் இரவு நேரமாகி விட்டதால், திருப்பணி, அன்னதானம், கோசாலை உண்டியல்கள் எண்ணப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X