துளிகள் செய்தி

தமிழ்நாடு

ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சுவாமியே சரணம் ஐயப்பா!

Added : நவ 17, 2021
Share
Advertisement
கோவை: கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில், நுாற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து நேற்று விரதம் துவங்கினர்.கேரளாவில் உள்ள சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.இவர்கள் கார்த்திகை, 1ம் தேதி துளசி மாலை அணிந்து, 41 நாட்கள் விரதம் இருந்து மண்டல பூஜைக்கும், 60 நாட்கள் விரதம் இருந்து மகர விளக்கு

கோவை: கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில், நுாற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து நேற்று விரதம் துவங்கினர்.கேரளாவில் உள்ள சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.இவர்கள் கார்த்திகை, 1ம் தேதி துளசி மாலை அணிந்து, 41 நாட்கள் விரதம் இருந்து மண்டல பூஜைக்கும், 60 நாட்கள் விரதம் இருந்து மகர விளக்கு பூஜைக்கும் செல்வது வழக்கம்.நேற்று கார்த்திகை, 1ம் தேதி என்பதால் கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில், நுாற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று முன் தினம், மண்டல பூஜைக்கு நடை திறக்கப்பட்டது.இந்த ஆண்டு ஒரு நாளைக்கு, 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதாக, ஐயப்ப பக்தர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X