வெள்ளாட்டுக்கறியில் செம்மறியாட்டுக்கறி! லேட்டாக போனால் இதுதான் கிடைக்கும்

Added : நவ 17, 2021
Advertisement
கோவை: ஆட்டுக்கறி வாங்கச் செல்வோர், கலப்படத்தால் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்கின்றனர் உணவு பாதுகாப்புத்துறையினர்.உணவுப் பொருட்களில் நடக்கும் கலப்படத்துக்கு முக்கிய காரணம், குறுகிய காலத்தில், குறைந்த முதலீட்டில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். இந்த பேராசையால் தான் காக்கா பிரியாணி, பூனைக்கறி, நாய்க்கறி விற்பனை புகார்கள் எழுகின்றன.கறிக்கடைகளுக்கு



கோவை: ஆட்டுக்கறி வாங்கச் செல்வோர், கலப்படத்தால் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்கின்றனர் உணவு பாதுகாப்புத்துறையினர்.உணவுப் பொருட்களில் நடக்கும் கலப்படத்துக்கு முக்கிய காரணம், குறுகிய காலத்தில், குறைந்த முதலீட்டில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். இந்த பேராசையால் தான் காக்கா பிரியாணி, பூனைக்கறி, நாய்க்கறி விற்பனை புகார்கள் எழுகின்றன.கறிக்கடைகளுக்கு செல்வோர், ஒரு சில விஷயங்களை உன்னிப்பாக கவனிப்பதன் மூலம் ஏமாறாமல் தப்பிக்க முடியும்.வெள்ளாட்டுக் கறிக்கு பதிலாக செம்மறி ஆட்டுக்கறியை கலந்து விற்பனை செய்வது நீண்ட காலமாக நடக்கும் ஒரு மோசடி. வெள்ளாட்டு வாலை வெட்டி, செம்மறி ஆட்டுக்கறியில் குத்தி வைப்பதும் அப்படித்தான்.எனவே, கறி வாங்க நினைப்பவர்கள், கடை திறக்கும்போதே சென்று விடுவது நல்லது. கறி வெட்டும்போது அருகில் நின்று பார்த்து வாங்குவது இன்னும் நல்லது. தாமதமாக சென்றால், இந்த கறிக்குள் அந்த கறி, அந்த கறிக்குள் இந்த கறி என்று கலந்து கட்டி ஏமாற்றி விட வாய்ப்புண்டு.காலையில் கறிக்கடை திறக்கும்போதே ஆட்டு ரத்தம், ஆட்டுக்குடல் இல்லையெனில், விற்பனை செய்யப்படுவது வெள்ளாடு தானா என வாடிக்கையாளர் சந்தேகப்பட முகாந்திரம் உள்ளது.ரத்தம் கிடைக்குமா, குடல் எப்போது வந்தால் கிடைக்கும், தலை, கால்கள் இருக்கிறதா என்று விசாரித்து விட்டு நம்பிக்கை ஏற்பட்டால் வாங்கலாம்.'நகர்ப்பகுதிகளில் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கறி வாங்கும்போது ஏமாற்றப்பட வாய்ப்புகள் அதிகம். கவனமாக இருப்பது நல்லது' என்கின்றனர், உணவு பாதுகாப்புத்துறையினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X