செய்தி செய்தி

தமிழ்நாடு

45 அடியாக உயர்ந்தது சிறுவாணி: 10 செ.மீ., உயரத்துக்கு மதகு திறப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
கோவை: சிறுவாணி அணையின் நீர் மட்டம், 45 அடியாக உயர்ந்ததால், 10 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.கேரள வனப்பகுதிக்குள் அமைந்துள்ள சிறுவாணி அணையை, அம்மாநில நீர்ப்பாசனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். நீர்க்கசிவு மற்றும் பாதுகாப்பு காரணங்களை கூறி, 45 அடி உயரத்துக்கே தண்ணீர் இருப்பு வைக்கப்படுகிறது.தென்மேற்கு பருவ மழையின் போது அதிக மழை



கோவை: சிறுவாணி அணையின் நீர் மட்டம், 45 அடியாக உயர்ந்ததால், 10 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.கேரள வனப்பகுதிக்குள் அமைந்துள்ள சிறுவாணி அணையை, அம்மாநில நீர்ப்பாசனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
நீர்க்கசிவு மற்றும் பாதுகாப்பு காரணங்களை கூறி, 45 அடி உயரத்துக்கே தண்ணீர் இருப்பு வைக்கப்படுகிறது.தென்மேற்கு பருவ மழையின் போது அதிக மழை பெய்தபோது, 70 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தற்போது அணை பகுதியில், வடகிழக்கு பருவ மழை அவ்வப்போது பெய்து வருகிறது.நேற்று முன்தினம் நீர் மட்டம், 45 அடியாக உயர்ந்தது. இருப்பினும், 5 செ.மீ., உயரத்துக்கே மதகு திறந்திருந்தது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 36 மி.மீ., மழை பதிவானதால், 10 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தமிழக வனப்பகுதி வழியாக சிறுவாணி செல்லும் வழித்தடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதால், தமிழக அதிகாரிகளால் அணைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.அணையை பார்வையிட நடவடிக்கைசில நாட்களுக்கு முன், கண்காணிப்பு அதிகாரிகள் தாரேஸ் அகமது, வன்னியபெருமாள் மற்றும் கலெக்டர் சமீரன் உள்ளிட்டோர், சிறுவாணிக்கு புறப்பட்டுச் சென்றனர். நிலச்சரிவு ஏற்பட்டிருந்ததால், ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததால், அணையின் தற்போதைய நிலவரம் தெளிவாக தெரியவில்லை. எனவே, கேரள மாநிலம் மண்ணார்காடு வழியாக சிறுவாணி சென்று அணை நிலவரத்தை பார்வையிட, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும்,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X