நெல்லையில் கொட்டிதீர்த்தது மழை: மின்னல் தாக்கி ஒருவர் பலி: 7 பேர் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் கொட்டிதீர்த்தது மழை: மின்னல் தாக்கி ஒருவர் பலி: 7 பேர் காயம்

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (2)
Share
திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகர பகுதியில் பெய்த மழையினால் புதிய பஸ் ஸ்டாண்ட் உள்பட பல இடங்கள் நீரில் மிதந்தன.மின்னல் தாக்கியதில் ஒருவர் பலியானார். 7 பேர் காயமுற்றனர். திருநெல்வேலி மற்றும் நாங்குநேரி, ராதாபுரம், பணகுடி, துாத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லுார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 4:30 மணிக்கு துவங்கிய பலத்த மழை இரவிலும் நீடித்தது. இதனால்

திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகர பகுதியில் பெய்த மழையினால் புதிய பஸ் ஸ்டாண்ட் உள்பட பல இடங்கள் நீரில் மிதந்தன.மின்னல் தாக்கியதில் ஒருவர் பலியானார். 7 பேர் காயமுற்றனர்.latest tamil newsதிருநெல்வேலி மற்றும் நாங்குநேரி, ராதாபுரம், பணகுடி, துாத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லுார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 4:30 மணிக்கு துவங்கிய பலத்த மழை இரவிலும் நீடித்தது. இதனால் பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்புறம் செயல்படும் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் நீரில் மூழ்கியது. பயணிகள் நிறுத்தியிருந்த டூவீலர்கள் மூழ்கின. பயணிகள் மிகுந்த சிரமப்பட்டனர். பஸ்களின் படிக்கட்டுவரையிலும் நீரில் மூழ்கியபடி சென்றன.

மனகாவலம்பிள்ளைநகர் மாநகராட்சி மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்தது. மருத்துவ மனை முழுவதும் தரையில் இருந்து 2அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. கிருஷ்ணாபுரம், வி.எம்.சத்திரம் ஆகிய இடங்களிலும் மழைநீர் வெள்ளமாக ஓடியது. கிருஷ்ணாபுரத்தில் ஒரு வீடு இடிந்தது.யாருக்கும் காயமில்லை.
நான்குவழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே மலைச்சரிவில் பாறை சரிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் வாகன போக்குவரத்தில் சிரமம்ஏற்பட்டது. மீட்பு பணிகள் நடந்தது. அன்புநகர் உள்ளிட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகர பகுதியில் ரோட்டை அடைத்து சுவர் எழுப்பிய இடங்களில் வெள்ளநீர் கடந்து செல்லமுடியாமல்குளம் போல தேங்கிகிடந்தது.


latest tamil news


திருநெல்வேலி மாநகரத்தில் தாழ்வான பகுதிகளான மனகாவலம்பிள்ளைநகர்,செந்தில்நகர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. திருநெல்வேலி பாளை.,சிவன் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது. அந்த பகுதியில் கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் விஷ்ணுசந்திரன், எம்.எல்.ஏ.,அப்துல்வகாப் ஆகியோர் பார்வையிட்டனர். மாநகராட்சியினர் வருவாய்த்துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தில் மின்னல் தாக்கியதில் ஆடுமேய்க்கும் தொழிலாளி முத்து 48, பரிதாபமாக இறந்தார். நாங்குநேரி பெருமாள்கோயிலுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. திருநெல்வேலி சுற்றுவட்டாரங்களில் தொடர்ந்து இரவில் பெய்த மழையினால் ஆங்காங்கே சேதங்கள் ஏற்பட்டன.பலத்த மழையினால் இன்று நவ.,18 ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார்.

துாத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லுார் அருகே பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது மின்னல் தாக்கியதில் துாதுகுழி மற்றும் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ஏழு பேர் மயக்கமடைந்தனர். சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X