தமிழ்நாடு

அப்பாடா... காலியாகிறது கொரோனா கூடாரம்! கொடிசியாவிடம் அரங்குகள் ஒப்படைப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
கோவை: கொரோனா தொற்று சிகிச்சை மையமாக மாற்றப்பட்டிருந்த கொடிசியா தொழிற்காட்சி வளாகம், மீண்டும் கொடிசியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் உள்ள நான்கு அரங்குகள் கொரோனா தொற்று சிகிச்சை மையமாக மாற்றப்பட்டிருந்தது. 1200 நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இரண்டு ஆண்டுகளாக பல ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்று



கோவை: கொரோனா தொற்று சிகிச்சை மையமாக மாற்றப்பட்டிருந்த கொடிசியா தொழிற்காட்சி வளாகம், மீண்டும் கொடிசியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் உள்ள நான்கு அரங்குகள் கொரோனா தொற்று சிகிச்சை மையமாக மாற்றப்பட்டிருந்தது. 1200 நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இரண்டு ஆண்டுகளாக பல ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. மையத்தில் நோயாளிகள் யாரும் இல்லாமல், பராமரிக்கப்பட்டு வந்தது. தீபாவளிக்கு பின்னர் 3 வது அலை வரும் வாய்ப்பு இருக்கலாம் எனக் கருதி, சுகாதார துறையினர் நான்கு மையங்களையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு குறைந்த நிலையில், இந்த சிகிச்சை மையத்தை காலி செய்து, கொடிசியாவிடம் ஒப்படைக்க சுகாதார துறையினர் முடிவு செய்தனர். இதன்படி, நான்கு அரங்குகளில் 3 அரங்குகள் நேற்று காலி செய்யப்பட்டன. ஒரு அரங்கில் மட்டும் 400 படுக்கை வசதிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தொற்று வரும் வாய்ப்பு இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், இந்த அரங்கும் விரைவில் காலியாகும்.
கொடிசியா தலைவர் ராமேஷ்பாபு கூறுகையில், "கொடிசியாவில் நான்கு அரங்குகள் கோவிட் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டிருந்தன. தொற்று குறைந்துவிட்ட நிலையில், மீண்டும் தொழிற்காட்சிகள் நடத்த அரங்குகளை ஒப்படைக்குமாறு, மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தோம். இதை ஏற்று, படிப்படியாக மையத்தை காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 அரங்குகள் தற்போது காலி செய்யப்பட்டுள்ளன. ஒரு அரங்கு மட்டும் உள்ளது. இதில் 400 பேர் சிகிச்சை பெறலாம். தற்போது இங்கும் நோயாளிகள் யாரும் இல்லை. விரைவில் இந்த அரங்கும் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்," என்றார்.தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு குறைந்த நிலையில், இந்த சிகிச்சை மையத்தை காலி செய்து, கொடிசியாவிடம் ஒப்படைக்க சுகாதார துறையினர் முடிவு செய்தனர். இதன்படி, நான்கு அரங்குகளில் 3 அரங்குகள் நேற்று காலி செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X