சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கியில் போலி நகை ஏழு பேர் மீது வழக்கு

Added : நவ 17, 2021
Share
Advertisement
சிவகங்கை:இளையான்குடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி நகையை அடகு வைத்து 47.87 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஏழு பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் சிவக்குமார், 53. இவர் இளையான்குடியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்தார். 2020 செப்டம்பர் 30 ல் இறந்து விட்டார். இவர் பணிக்காலத்தில்

சிவகங்கை:இளையான்குடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி நகையை அடகு வைத்து 47.87 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஏழு பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் சிவக்குமார், 53. இவர் இளையான்குடியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்தார். 2020 செப்டம்பர் 30 ல் இறந்து விட்டார். இவர் பணிக்காலத்தில் பரமக்குடி, இளையான்குடியை சேர்ந்த 39 - 52 வயதுள்ள ஆறு பெண்களின்ஆதார், ரேஷன் கார்டு முகவரியை காண்பித்து போலி நகைகளை வங்கியில் அடமானமாக வைத்து 47 லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளார்.

வங்கியில் நடந்த ஆய்வின் போது போலி நகை விஷயம் அம்பலமானது. வங்கி மேலாளர் கணேசபாண்டியன், 31, சிவகங்கை மாஜிஸ்திரேட் 2 நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிமன்ற உத்தரவுபடி நகை மதிப்பீட்டாளர் உட்பட ஏழு பேர் மீது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X