அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க தயாராகும் பா.ஜ.,: இரட்டை இலக்கத்தில் வார்டுகள் பெற திட்டம்

Added : நவ 17, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
கோவை: உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள், துரிதகதியில் நடந்து வருகின்றன. இம்மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க., தரப்பில், நாளை வரை கட்சியினரிடம் விருப்ப மனு பெறப்படுகிறது.கடந்த சட்டசபை தேர்தலில், 10 தொகுதிகளையும் தி.மு.க., பறிகொடுத்ததால், உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்பில், மின்துறை அமைச்சர்
 உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க தயாராகும் பா.ஜ.,: இரட்டை இலக்கத்தில் வார்டுகள் பெற திட்டம்கோவை: உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள், துரிதகதியில் நடந்து வருகின்றன. இம்மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க., தரப்பில், நாளை வரை கட்சியினரிடம் விருப்ப மனு பெறப்படுகிறது.கடந்த சட்டசபை தேர்தலில், 10 தொகுதிகளையும் தி.மு.க., பறிகொடுத்ததால், உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்பில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வார்டு வார்டாகச் சென்று, 'மக்கள் சபை' நிகழ்ச்சி நடத்தி, மனுக்கள் பெறுகிறார். வரும், 22, 23ல் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை வருகிறார். அப்போது, பல்வேறு நலத்திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016ல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருந்தபோது, 82 வார்டுகளில் தி.மு.க., 17 வார்டுகளில் காங்., 1 வார்டில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிட, வேட்பு மனு தாக்கல் செய்தன.
இப்போது, கூடுதலாக இ.கம்யூ., - மா.கம்யூ., - ம.தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற்றிருப்பதால், ஏராளமான வார்டுகளை தாரை வார்க்க வேண்டிய நெருக்கடி, தி.மு.க.,வுக்கு ஏற்பட்டிருக்கிறது.அதி.மு.க., கூட்டணியில் அத்தகைய பிரச்னை இல்லை. பா.ஜ., மற்றும் த.மா.கா.,வுக்கு மட்டுமே வார்டுகளை பிரித்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. பா.ஜ.,வில், வரும், 21 முதல் விருப்ப மனு பெறப்படுகிறது. இவ்விஷயத்தில், அ.தி.மு.க., தரப்பு 'சைலன்ட்'டாக இருக்கிறது. இருந்தாலும், நகர் பகுதியில் பா.ஜ., வலுவாக இருப்பதால், இரட்டை இலக்கத்தில் வார்டு ஒதுக்கீடு மற்றும் மண்டல தலைவர் பொறுப்பு, நிலைக்குழு பொறுப்புகள் பெற திட்டமிட்டுள்ளது.தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் (பா.ஜ.,) கூறுகையில், ''வரும், 21 முதல் கட்சியினரிடம் விருப்ப மனு பெற இருக்கிறோம். கட்சி வலுவாக இருப்பதால், இரட்டை இலக்கத்தில் வார்டுகள் கேட்டுப்பெறுவோம். மக்களிடம் நெருக்கமாக இருப்போருக்கே, உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு கிடைக்கும். அ.தி.மு.க., கூட்டணியில் இருப்போரே மக்களின் தேவையை அறிந்து செயலாற்றி வருகின்றனர். எளிதில் வெற்றி பெறுவோம். பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட வேலைகள் நடந்து வருகின்றன,'' என்றார்.வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுனன் (அ.தி.மு.க.,) கூறுகையில், ''எங்கள் கட்சி கட்டமைப்பு இன்னமும் 'ஸ்ட்ராங்க்'காக இருக்கிறது. ரூ.150 கோடிக்கு 'டெண்டர்'களை 'கேன்சல்' செய்ததே, தி.மு.க., அரசின் சாதனை. கடந்த ஆறு மாதங்களாக, இந்த அரசு கோவையை புறக்கணித்து வருவதை சொன்னாலே, எங்களுக்கு ஓட்டு கிடைக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
18-நவ-202122:07:26 IST Report Abuse
John Miller அதிமுக போன தேர்தல் மாதிரி பணத்தை வாரி இறைக்க முடியுமா?
Rate this:
Cancel
18-நவ-202120:36:32 IST Report Abuse
அப்புசாமி ஒரு ஓட்டு வாங்குன அந்த பா.ஜ வேட்பாளரை நினச்சேன். சிரிச்சேன். முதல்ல இரட்டை இலக்கத்தில் ஓட்டு வாங்கப் பாருங்க அண்ணாச்சி.
Rate this:
Cancel
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
18-நவ-202118:14:24 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன் சும்மா... காமெடி பண்ணாதீங்க சார்...? “கருவாடு மீனாகாது... கறந்த பால் மடி புகாது...” அப்படி இது நடந்துடுச்சுன்னா... தாமரை மலரும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X