அவினாசிலிங்கம் பல்கலையில் | Dinamalar

அவினாசிலிங்கம் பல்கலையில்

Added : நவ 17, 2021
Share
கோவை: அவினாசிலிங்கம் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில், சர்வதேச மாணவர்களின் கல்வி மைய திறப்பு விழா நேற்று நடந்தது. பல்கலை வேந்தர் தியாகராஜன் தலைமை வகித்தார். கல்வியிலும், கலாசாரத்திலும் சர்வதேச மாணவர்களை ஒருங்கிணைக்கும் விதத்திலும், அம்மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையிலும், இம்மையம் செயல்படவுள்ளது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வெளிநாடு மாணவர்களுக்கு

கோவை: அவினாசிலிங்கம் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில், சர்வதேச மாணவர்களின் கல்வி மைய திறப்பு விழா நேற்று நடந்தது. பல்கலை வேந்தர் தியாகராஜன் தலைமை வகித்தார். கல்வியிலும், கலாசாரத்திலும் சர்வதேச மாணவர்களை ஒருங்கிணைக்கும் விதத்திலும், அம்மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையிலும், இம்மையம் செயல்படவுள்ளது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வெளிநாடு மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் பல்வேறு தகவல்கள் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பல்கலை மானியக்குழு இணை செயலாளர் அர்ச்சனா தாகூர், இந்திய பிரெஞ்ச் மையத்தின் தலைவர் எரிக் பெட்ரோட்டல், துணைவேந்தர் பிரேமாவதி விஜயன், பதிவாளர் கவுசல்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X