செய்தி செய்தி

தமிழ்நாடு

இடஒதுக்கீட்டில் இணைந்த மாணவர்களுக்கு ஆலோசனை

Added : நவ 17, 2021
Share
Advertisement
கோவை: இந்துஸ்தான் பொறியியல் கல்லுாரியில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.அரசு பள்ளி மாணர்களை உயர்கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில், 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனடிப்படையில், இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில், 34 மாணவர்கள் நடப்பாண்டில் சேர்க்கை பெற்றுள்ளனர்.இந்த மாணவர்களுக்கான

கோவை: இந்துஸ்தான் பொறியியல் கல்லுாரியில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.அரசு பள்ளி மாணர்களை உயர்கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில், 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனடிப்படையில், இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில், 34 மாணவர்கள் நடப்பாண்டில் சேர்க்கை பெற்றுள்ளனர்.இந்த மாணவர்களுக்கான தனிப்பிரிவு துவக்கவிழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில், மாணவர்களுக்கான சிறப்பு ஆலோசகராக மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். மாணவர்களுக்கு தனி வாட்ஸ்அப் குழுவும் துவங்கப்பட்டது. விழாவில், கல்லூரி தாளாளர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா, முதன்மை அலுவலர் கருணாகரன், முதல்வர் ஜெயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X