சொத்துக்காக தாயை கொல்ல முயன்ற கொடூர மகள் கைது| Dinamalar

சொத்துக்காக தாயை கொல்ல முயன்ற கொடூர மகள் கைது

Added : நவ 17, 2021
Share
கோவை,: கோவையில் சொத்துக்காக, பெற்ற தாயையே கொல்ல முயன்ற மகளை, போலீசார் கைது செய்தனர்.கோவை, கணபதி விநாயகபுரத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மனைவி பாப்பாத்தி (எ) சின்ன ராமாத்தாள்,75. இவரது கணவர், கருப்பசாமி 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுடைய மகள் ஜோதிமணி. கணவரை பிரிந்து விட்ட ஜோதிமணி, தனது 2 குழந்தைகளுடன் தாயுடன் வசித்து வந்தார்.பாப்பாத்திக்கு சொந்தமாக, 2.75

கோவை,: கோவையில் சொத்துக்காக, பெற்ற தாயையே கொல்ல முயன்ற மகளை, போலீசார் கைது செய்தனர்.கோவை, கணபதி விநாயகபுரத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மனைவி பாப்பாத்தி (எ) சின்ன ராமாத்தாள்,75. இவரது கணவர், கருப்பசாமி 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுடைய மகள் ஜோதிமணி. கணவரை பிரிந்து விட்ட ஜோதிமணி, தனது 2 குழந்தைகளுடன் தாயுடன் வசித்து வந்தார்.பாப்பாத்திக்கு சொந்தமாக, 2.75 சென்ட் இடம் நீலம்பூரில் உள்ளது. ஜோதிமணி அந்த பத்திரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில், பத்திரங்கள் காணாமல் போனதை அறிந்த பாப்பாத்தி, போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், சொத்து பத்திரங்கள் மகளிடம் இருந்தது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த பாப்பாத்தி, மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தார். கலெக்டர் ஆர்.டி.ஓ.,விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆத்திரமடைந்த ஜோதிமணி, நேற்றுமுன்தினம் பாப்பாத்தி உறங்கி கொண்டிருந்தபோது அவரது முகத்தில் தலையணையால் அழுத்தி கொலை செய்ய முயன்றார். தக்க சமயத்தில், ஜோதிமணியின் குழந்தைகள் அங்கு வந்து தடுத்து நிறுத்தினர். இருப்பினும், ஆத்திரம் அடங்காத ஜோதிமணி, வீட்டிற்கு வெளியில் இருந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து வந்து மூதாட்டியின் காலில் போட்டுள்ளார். இதனால், இரண்டு கால்களும் உடைந்து, பாப்பாத்தி உயிருக்கு போராடியுள்ளார். அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் ஜோதிமணியை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X