கோவை: கோவையில் சமீபத்தில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான மாணவி தற்கொலை செய்து கொண்டார். இவ்விவகாரம் மாநில அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது கட்டாயமாகியுள்ளது. பல்வேறு அமைப்புகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில், கோவை அரசு கலைக் கல்லுாரியில் மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.கோவை அரசு கலைக் கல்லுாரி முதல்வர் கலைச்செல்வி கூறியதாவது:கல்லூரியில் மாணவிகள், பெண் ஊழியர்கள் பாதுகாப்பை கருதி புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கல்லூரி நேரத்துக்கு பின் மாணவிகள் கல்லூரி, வகுப்பறைகளில் இருக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்கப்படும். கண்காணிப்பு கேமராக்களும் உள்ளன. தவிர, கல்லூரி வளாகத்தில் மாணவர், மாணவியருக்கென தனித்தனி புகார் பெட்டிகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE