போலி நிறுவன பிரதிநிதிகளை நம்பாதீங்க! விவசாயிகளுக்கு வேளாண் துறை எச்சரிக்கை| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

'போலி நிறுவன பிரதிநிதிகளை நம்பாதீங்க!' விவசாயிகளுக்கு வேளாண் துறை எச்சரிக்கை

Added : நவ 17, 2021
Share
கோவை: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், உரிமம் பெறாத, அங்கீகாரம் இல்லாத நிறுவனப் பிரதிநிதிகள் மூலம், தென்னந்தோப்புகளில் உரமிடுதல், பூச்சி மருந்து வேர் வழி செலுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வேளாண் துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம், உரிய உரம், பூச்சி மருந்து உரிமம் இல்லாத நிறுவனப்பிரதிநிதிகளின் பரிந்துரைகளை ஏற்க வேண்டாம் என,

கோவை: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், உரிமம் பெறாத, அங்கீகாரம் இல்லாத நிறுவனப் பிரதிநிதிகள் மூலம், தென்னந்தோப்புகளில் உரமிடுதல், பூச்சி மருந்து வேர் வழி செலுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வேளாண் துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம், உரிய உரம், பூச்சி மருந்து உரிமம் இல்லாத நிறுவனப்பிரதிநிதிகளின் பரிந்துரைகளை ஏற்க வேண்டாம் என, வேளாண், உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.இவ்வாறு உரமிடுதல், பயிர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதால் அதிக செலவு, உரிய பலன்கள் கிடைப்பதில்லை. எனவே வட்டார கள அலுவலர்கள், வேளாண் துறை அலுவலர்களின் ஆலோசனை பெற்று இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் இல்லாத தோட்டங்களுக்கே நேரடியாக வந்து மருந்துகளை விற்பனை செய்வோரை நம்பி ஏமாற வேண்டாம். இத்தகைய முகவர்கள் குறித்த தகவல்களை, வேளாண் துறையில் தெரிவித்தால், உரக்கட்டுப்பாட்டு சட்டம், 1985, பூச்சிக்கொல்லி மருந்து சட்டம், 1968ன் படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, வேளாண் துறை இணை இயக்குனர் சித்ராதேவி தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X