நுகர்வோர் ஆணைய லோக் அதாலத்| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

நுகர்வோர் ஆணைய 'லோக் அதாலத்'

Added : நவ 17, 2021
Share
கோவை: கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், காணொலி 'லோக் அதாலத்' விசாரணைக்கு, நாளைக்குள் விருப்ப மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், நீண்டகாலம் நிலுவையிலுள்ள, 2015ம் ஆண்டு வரையிலான வழக்குகளை, காணொலி வாயிலாக, 'லோக்அதாலத்' விசாரணை நடத்த மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில்,

கோவை: கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், காணொலி 'லோக் அதாலத்' விசாரணைக்கு, நாளைக்குள் விருப்ப மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், நீண்டகாலம் நிலுவையிலுள்ள, 2015ம் ஆண்டு வரையிலான வழக்குகளை, காணொலி வாயிலாக, 'லோக்அதாலத்' விசாரணை நடத்த மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வரும் 25 மற்றும் 30ம் தேதி, காணொலி வாயிலாக 'லோக் அதாலத்' விசாரணை நடத்தப்படுகிறது. நிலுவை வழக்கில் தீர்வு காண விரும்பும் புகார்தாரர்கள், எதிர் மனுதாரர்கள் மற்றும் இரு தரப்பு வக்கீல்கள், நாளைக்குள் ஆணையத்தில் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X