இருளில் வாகன சோதனை செய்ததால் விபத்து: மோட்டார் வாகன ஆய்வாளரை கண்டித்து மறியல்| Dinamalar

இருளில் வாகன சோதனை செய்ததால் விபத்து: மோட்டார் வாகன ஆய்வாளரை கண்டித்து மறியல்

Added : நவ 17, 2021
Share
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மோட்டார் வாகன ஆய்வாளரை கண்டித்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி அருகே, வடக்கிப்பாளையம் - நடுப்புணி ரோடு, ராமபட்டிணம் பிரிவு அருகே கோபாலாபுரம் ஆர்.டி.ஓ., சோதனைச்சாவடியை சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர், வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.அதிகாரிகளை கண்டு நிற்காமல் வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், அவ்வழியாக வந்த மொபட்டின்



பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மோட்டார் வாகன ஆய்வாளரை கண்டித்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி அருகே, வடக்கிப்பாளையம் - நடுப்புணி ரோடு, ராமபட்டிணம் பிரிவு அருகே கோபாலாபுரம் ஆர்.டி.ஓ., சோதனைச்சாவடியை சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர், வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.அதிகாரிகளை கண்டு நிற்காமல் வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், அவ்வழியாக வந்த மொபட்டின் மீது மோதியது. மொபட்டில் சென்ற மாப்பிள்ளைகவுண்டன்புதுாரை சேர்ந்த செல்வராஜ்,45, காயமடைந்தார். இதனால், மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.பொதுமக்கள் கூறியதாவது:கோபாலபுரம் சோதனைச்சாவடியை சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர் ராமலிங்கம், ராமபட்டணம் பிரிவு அருகே, போதிய வெளிச்சம் இல்லாத பகுதியில், பேரிகார்டு உள்ளிட்ட எவ்வித வசதியும் ஏற்படுத்தாமல், வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அவ்வழியாக வந்த வாகனம், அதிகாரிகளை கண்டதும் வேகமெடுத்து, எதிரே வந்த மொபட்டில் மோதி, நிற்காமல் சென்றது.காயமடைந்தவருக்கு உதவியோ, '108' ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுப்பது எதுவும் செய்யாமல், மோட்டார் வாகன ஆய்வாளர் சென்றுள்ளார்.இருளில், போதிய தடுப்புகள் இல்லாமல் ஆய்வு செய்ததே விபத்துக்கு காரணம். அதனால், அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த, டி.எஸ்.பி., தமிழ்மணி, இன்ஸ்பெக்டர் ராம்தாஸ் மற்றும் எஸ்.ஐ., ராமச்சந்திரன் ஆகியோர் பேச்சு நடத்தினர்.விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என போலீசார் தெரிவித்ததால், மக்கள் கலைந்து சென்றனர். கொட்டும் மழையில் மக்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.இருளில் எதற்கு ஆய்வு?கோபாலபுரம் ஆர்.டி.ஓ., சோதனைச்சாவடியை சேர்ந்த அதிகாரிகள், அவ்வப்போது இந்த ரோட்டில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
பாதுகாப்பிற்காக பேரிகார்டு இல்லாமல் இருளில் நின்று சோதனை செய்வது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'வாகனங்கள் தணிக்கை செய்ய அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். வெளிச்சம் மற்றும் போலீஸ் பேரிகார்டு உள்ள இடமாக தேர்வு செய்து நின்று வாகன சோதனை செய்ய வேண்டும். வாகன சோதனையால், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X