போலீஸ் செய்திகள்

Added : நவ 17, 2021
Share
Advertisement
தந்தை மாயம்; மகன் புகார்பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பாஸ்கர் நகரை சேர்ந்த கிருஷ்ணன் குட்டிக்கும், மனைவிக்கும் இடையே, வீட்டை பராமரிப்பதில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்து கிருஷ்ணன் குட்டி, சகோதரிகள் வீட்டுக்கு சென்று விடுவார்; மீண்டும் திரும்ப வருவதும் வழக்கம்.கடந்த சில நாட்களுக்கு முன், பிரச்னை ஏற்பட்டு வீட்டை விட்டு சென்றவர் திரும்பி வரவில்லை.

தந்தை மாயம்; மகன் புகார்பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பாஸ்கர் நகரை சேர்ந்த கிருஷ்ணன் குட்டிக்கும், மனைவிக்கும் இடையே, வீட்டை பராமரிப்பதில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்து கிருஷ்ணன் குட்டி, சகோதரிகள் வீட்டுக்கு சென்று விடுவார்; மீண்டும் திரும்ப வருவதும் வழக்கம்.கடந்த சில நாட்களுக்கு முன், பிரச்னை ஏற்பட்டு வீட்டை விட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மகன் காயர் தொழில் செய்யும் ரெஜித்,34, தந்தையை கண்டுபிடித்து தருமாறு, கிழக்கு போலீசாரிடம் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.செக்யூரிட்டி இறப்பு குறித்து விசாரணைதேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்தவர் செக்யூரிட்டி மீரான்,50. இவருக்கு, அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி சிகிச்சை பெற்றுள்ளார்.இந்நிலையில் கடந்த, 15ம் தேதி, கோவிந்தாபுரம் பீர் கம்பெனியில் வேலை முடித்து மருத்துவமனை செல்வதற்காக, பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் வந்தபோது மயங்கி விழுந்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.மது போதையில் தகராறுகேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி முகமதுபசில் என்கிற கிருஷ்டி, 28. இவரது மனைவி கடந்த, 10 நாட்களாக காணவில்லை. இதனால், அவரது நண்பர்களான கோவை செல்வபுரம் சுதாகர்,43, கோவை உக்கடம் துரைராஜ், 28 ஆகியோருடன் இணைந்து தேடி வருகின்றனர்.நேற்றுமுன்தினம் பொள்ளாச்சி வந்த மூன்று பேரும், ஏ.டி.எஸ்.சி., தியேட்டர் ரோட்டில் மதுஅருந்தியுள்ளனர். அப்போது, மீண்டும் மது வாங்க நண்பர்கள் பணம் கேட்டுள்ளனர். அதற்கு முகமதுபசில் பணம் இல்லை என கூறியதால், மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது, பாக்கெட்டில் இருந்த பிளேடு, கத்தியை எடுத்து முகமதுபசில் கழுத்தில் கீறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். முகமதுபசில் கொடுத்த புகாரின் பேரில், மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நண்பர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X