செய்தி செய்தி

தமிழ்நாடு

மழையால் நீர்மட்டம் அதிகரிப்பு: மீன் பிடிப்பு பாதிப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
உடுமலை: உடுமலை அமராவதி அணைப்பகுதிகளில் தொடர் மழை மற்றும் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், மீன் பிடிப்பு குறைந்துள்ளது.உடுமலை அமராவதி அணையில், மீன் வளர்ச்சி கழகம் சார்பில், கட்லா, ரோகு, மிர்கால், திலேப்பியா உள்ளிட்ட மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படுகிறது.வளர்ந்த மீன்களை தினமும், 18 பரிசல்கள் வாயிலாக, 36 மீனவர்கள் வலை போட்டு பிடித்து வருகின்றனர். அணையில் தினமும்,

உடுமலை: உடுமலை அமராவதி அணைப்பகுதிகளில் தொடர் மழை மற்றும் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், மீன் பிடிப்பு குறைந்துள்ளது.உடுமலை அமராவதி அணையில், மீன் வளர்ச்சி கழகம் சார்பில், கட்லா, ரோகு, மிர்கால், திலேப்பியா உள்ளிட்ட மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படுகிறது.வளர்ந்த மீன்களை தினமும், 18 பரிசல்கள் வாயிலாக, 36 மீனவர்கள் வலை போட்டு பிடித்து வருகின்றனர். அணையில் தினமும், சராசரியாக, 400 கிலோ மீன் பிடிக்கின்றனர்.கடந்த இரண்டு வாரமாக, அணை நீர்மட்டம் உயர்ந்து காணப்படும் நிலையில், அணைப்பகுதிகளில் தொடர்ந்து மழையும் பெய்து வருவதால், மீனவர்கள் வலை விரிக்க அணைக்குள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிக பரப்பளவில் நீர் தேங்கியுள்ளதால், மீனவர் வலைகளில் மீன்களும் சிக்குவதில்லை.இதனால், அணையில் மீன் பிடிப்பு பெருமளவு குறைந்து, கடந்த ஒரு வாரமாக, 50 முதல், 70 கிலோ மீன்கள் மட்டுமே சிக்குகிறது. இதனால், கூலி கட்டுபடியாகாமல், மீனவர்கள் பாதித்துள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில், 'அணை நீர்மட்டம், 87 அடிக்கு மேல் உள்ளதால், மீனவர்கள் வலை விரிப்பதிலும், மீன்கள் பிடிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 'அதோடு, மாலை நேரம் வலை விரித்து, அதிகாலை மீன்களுடன் வலை எடுத்து வர அணைக்குள் மீனவர்கள் பரிசல்களில் சென்று வருவர்'.'தற்போது, அணைப்பகுதிகளில் மழையும் பெய்து வருவதால், ஒரு சில நாட்கள் வலை விரிக்கக்கூட உள்ளே செல்ல முடியாத சூழல் உள்ளது. வலை விரித்து மீன் பிடித்தாலும், 18 பரிசல்களும் சேர்த்து, 50 முதல், 70 கிலோ மீன்கள் மட்டுமே கிடைக்கிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X