நெரிசலுக்கு மாற்று வழி என்ன? அதிகாரிகள் சிந்திப்பார்களா...

Added : நவ 17, 2021
Share
Advertisement
பல்லடம்: பல்லடத்தில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்த, மாற்று வழி குறித்து அதிகாரிகள் சிந்திக்க வேண்டியது அவசியம்.பல்லடத்தில், கோவை -- திருச்சி என்.எச்.,81 தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், அவிநாசி, பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், கொச்சி செல்லும் மாநில நெடுஞ்சாலைகளிலும் இணைகின்றன. இந்த ரோட்டில், கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகள் கடும்

பல்லடம்: பல்லடத்தில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்த, மாற்று வழி குறித்து அதிகாரிகள் சிந்திக்க வேண்டியது அவசியம்.பல்லடத்தில், கோவை -- திருச்சி என்.எச்.,81 தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், அவிநாசி, பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், கொச்சி செல்லும் மாநில நெடுஞ்சாலைகளிலும் இணைகின்றன. இந்த ரோட்டில், கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரிங் ரோடு, பை பாஸ் ரோடு உள்ளிட்ட திட்டங்கள், பெயரளவுக்கு மட்டுமே உள்ளன. இதனால், மாற்றுவழி மூலம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, அதிகாரிகள் சிந்திக்க வேண்டும்.பல்லடம் -- பொள்ளாச்சி ரோடு, வடுகபாளையத்தில் இருந்து கொசவம்பாளையம் ரோடு வழியாக செல்லும் இணைப்பு சாலை, என்.எச்., ரோட்டுடன் இணைகிறது. என்.எச்., ரோடு, பொள்ளாச்சி, உடுமலை, மற்றும் பல்லடம் நகருக்குள் வந்து செல்லும் பெரும்பாலான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், இந்த இணைப்பு சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த ரோட்டை மாற்று வழியாக பயன்படுத்த முடியும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது:பல்லடம் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் கடந்து செல்லும் முன், கொசவம்பாளையம் ரோடு வழியாக, எளிதில் சென்று விடலாம். ஆனால், குறுகலான ரோடு, வேகத்தடைகள், பள்ளங்கள், மற்றும் ஆக்கிரமிப்புகள் காரணமாக இடையூறுகள் ஏற்படுகிறது.ஆக்கிரமிப்புகளை அகற்றி, வளைவான பகுதிகளை சீரமைப்பதன் மூலம், இந்த ரோட்டை மாற்று வழியாக பயன்படுத்த முடியும். ஆனால், அதிகாரிகள் யாரும் இது குறித்து சிந்திக்காததால், போக்குவரத்து நெரிசல் என்பது தீர்க்க முடியாத பிரச்னையாக இருந்து வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X