நேரு பிறந்த நாள் பேச்சு போட்டி மாணவ, மாணவியர் அசத்தல்

Added : நவ 17, 2021
Share
Advertisement
திருப்பூர்: மாவட்ட தமிழ் வளர்ச் சித்துறை சார்பில் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி, திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலை கல்லுாரியில் நடந்தது.முதன்மை கல்வி அலுவலக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் ஒருங்கிணைப்பாளராகவும், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியை அஞ்சுகவதி,

திருப்பூர்: மாவட்ட தமிழ் வளர்ச் சித்துறை சார்பில் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி, திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலை கல்லுாரியில் நடந்தது.முதன்மை கல்வி அலுவலக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் ஒருங்கிணைப்பாளராகவும், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியை அஞ்சுகவதி, வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியை விஜயலட்சுமி, அருள்புரம் அரசு மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியை லோகநாயகி நடுவர்களாக பங்கேற்றனர்.பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில், ஜெய்வாபாய் பள்ளி மாணவி ரத்துஜா முதல் இடமும், பெருமாநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் மகாதேவன் இரண்டாமிடம்.கே.செட்டிபாளையம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் எழிலரசன் மூன்றாமிடம் பெற்று அசத்தினர். பத்மாவதிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகாஸ்ரீ, தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பூபதி சிறப்பு பரிசுக்கு தேர்வாகி உள்ளனர்.கல்லுாரி மாணவர்களுக்கு இடையே நடந்த போட்டிக்கு, எல்.ஆர்.ஜி., கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் கிரிஜா ஆரோக்கியமேரி ஒருங்கிணைப்பாளராகவும், உதவி பேராசிரியர்கள் இந்திரா, இந்துமதி, ரசூல்அலி நடுவர்களாகவும் பங்கேற்றனர்.இதில், சிக்கண்ணா கல்லுாரி மாணவி பிருந்தா, ஏ.வி.பி., கல்லுாரிமாணவி கரிஷ்மா, பல்லடம் கல்லுாரி மாணவன் தாமோதரசாமி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X