செய்தி செய்தி

தமிழ்நாடு

20 ஆண்டுகளுக்கு பின் கத்தாங்கண்ணி குளம் நிரம்பியது

Added : நவ 17, 2021
Share
Advertisement
திருப்பூர்: இருபது ஆண்டுக்கு பின் நிரம்பிய கத்தாங்கண்ணி குளத்தால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.காங்கயம், பாலசமுத்திரம் புதுாரில் நொய்யல் ஆற்றின் மூலம் நீர் நிரம்பும் வகையில் கத்தாங்கண்ணி குளம், 108 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.நொய்யல் ஆற்றில் இருந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு குளங்களுக்கு நீர் கொண்டு செல்லும் வகையில் தடுப்பணைகள் கட்டப்பட்டு,

திருப்பூர்: இருபது ஆண்டுக்கு பின் நிரம்பிய கத்தாங்கண்ணி குளத்தால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.காங்கயம், பாலசமுத்திரம் புதுாரில் நொய்யல் ஆற்றின் மூலம் நீர் நிரம்பும் வகையில் கத்தாங்கண்ணி குளம், 108 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.நொய்யல் ஆற்றில் இருந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு குளங்களுக்கு நீர் கொண்டு செல்லும் வகையில் தடுப்பணைகள் கட்டப்பட்டு, மழை காலங்களில் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்று சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்துகின்றனர்.தற்போது பெய்யும் பருவமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் கடந்த, 10 நாட்களாக மழைநீர் சென்று கொண்டிருக்கிறது.
விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, கடந்த வாரம் முதல் கத்தாங்கண்ணி குளத்துக்கு நொய்யல் ஆற்று மழை நீர் திறந்து விடப்பட்டது.இதனால், 20 ஆண்டுகளுக்கு பின், இந்த குளம் நேற்று முழு கொள்ளளவை எட்டியது. அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தண்ணீரில் மலர் துாவி வணங்கினர்.குளத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடி நீர் தட்டுப்பாடு நீங்கி, விவசாய கிணறுகளில் போதிய நீரும் கிடைக்கும் என, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X