பொது செய்தி

தமிழ்நாடு

ஐயப்ப பக்தர்கள் விரதம்; மீன்கள் விலை வீழ்ச்சி

Added : நவ 17, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்--ஐயப்ப பக்தர்கள் விரதம்துவங்கியதையடுத்து ராமேஸ்வரத்தில் மீன்கள் விலை வீழ்ச்சியடைந்தது.கார்த்திகை ஒன்றாம் தேதிமுதல் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, 45 முதல் 60 நாள்கள் வரை விரதம் இருந்து சபரிமலை செல்வார்கள். அதன்படி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் விநாயகர் சன்னதி முன் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், குழந்தைகளுடன் மாலை அணிந்து, விரதத்தை துவக்கினர்.ஐயப்ப

ராமேஸ்வரம்--ஐயப்ப பக்தர்கள் விரதம்துவங்கியதையடுத்து ராமேஸ்வரத்தில் மீன்கள் விலை வீழ்ச்சியடைந்தது.கார்த்திகை ஒன்றாம் தேதிமுதல் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, 45 முதல் 60 நாள்கள் வரை விரதம் இருந்து சபரிமலை செல்வார்கள். அதன்படி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் விநாயகர் சன்னதி முன் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், குழந்தைகளுடன் மாலை அணிந்து, விரதத்தை துவக்கினர்.ஐயப்ப பக்தர்கள் சைவ உணவுக்கு மாறியதால் நகராட்சி மீன் மார்க்கெட்டில் கரை வலை மீன்கள் விற்பனையாகவில்லை. மொத்த வியாபாரிகள் 30 முதல் 50 சதவீதம் விலை குறைத்து, அதாவது ஒரு கிலோ பாரை மற்றும் நகரை மீன்கள் ரூ.200 (பழைய விலை ரூ.300), முரல் ரூ.150 (பழைய விலை ரூ.200), சீலா ரூ.400 (பழைய விலை ரூ.600), காரல் ரூ.50 (பழைய விலை ரூ.100) வாங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X