தமிழ்நாடு

பள்ளி செல்லா குழந்தைகள், 4 ஆயிரம் பேர்: அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்

Added : நவ 17, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையில், 4 ஆயிரம் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு, அருகில் உள்ள அரசுப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.குடும்ப சூழல், பொருளாதார பின்னடைவு காரணமாக மாணவர்கள் பலர் பள்ளி படிப்பை இடையிலே நிறுத்துவிடுகின்றனர். இதை தடுக்க, ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்கள்



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையில், 4 ஆயிரம் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு, அருகில் உள்ள அரசுப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.குடும்ப சூழல், பொருளாதார பின்னடைவு காரணமாக மாணவர்கள் பலர் பள்ளி படிப்பை இடையிலே நிறுத்துவிடுகின்றனர். இதை தடுக்க, ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்கள் கண்டறியப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர்.நடப்பாண்டுக்கான கணக்கெடுப்பு ஆக., மாதம் துவங்கியது. ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் வீடுதோறும் சென்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று வரையில், 4 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு வயதிற்கேற்ற வகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் 2009ன்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எட்டாம் வகுப்பு வரையில் சேர்க்கப்பட வேண்டும்.தேங்காய் களம், செங்கல் சூளை, அரிசி ஆலை, பனியன் கம்பெனி, கட்டுமான பணி, ஓட்டல் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிய வடமாநிலத்தவர்கள் பலர் திருப்பூருக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இவர்களின் குழந்தைகள் நேரடி சேர்க்கை வாயிலாக, பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். இந்தாண்டு, 200 பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.ஊத்துக்குளி துவக்கப்பள்ளியில், 20 ஒடிசா மாநில குழந்தைகள் சேர்க்கப்பட, ஒரிசாவை சேர்ந்த சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தொகுப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளியில் சேர்க்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் அரசின் விலையில்லா புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.திருப்பூர் மாவட்டத்தில் நேற்றுவரையில், 4 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு வயதிற்கேற்ற வகுப்புகளில்சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X