சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கனமழை எதிரொலி பருத்தி ஏலம் நிறுத்தம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
அவிநாசி: பருத்தி வரத்து அதிகரித்த நிலையில் மழையால், ஏலத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இம்முறை, அவிநாசி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பிற இடங்களிலிருந்து, 1,500க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பருத்தி எடுத்து வரப்பட்டது.பொதுவாக, மாலை, 5:00 மணிக்கெல்லாம் ஏலம் முடிந்து விடும். ஆனால், நேற்று,

அவிநாசி: பருத்தி வரத்து அதிகரித்த நிலையில் மழையால், ஏலத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இம்முறை, அவிநாசி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பிற இடங்களிலிருந்து, 1,500க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பருத்தி எடுத்து வரப்பட்டது.பொதுவாக, மாலை, 5:00 மணிக்கெல்லாம் ஏலம் முடிந்து விடும். ஆனால், நேற்று, வரத்து அதிகரித்தால், ஏலம் முடிவதில் தாமதம் ஏற்பட்டது.இதற்கிடையில், மாலை, 5:00 மணி துவங்கி ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், ஏலத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இன்று காலை, 10:00 மணிக்கு மீண்டும் ஏலத்தை தொடர்வது என விற்பனைக்கூட சங்க நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X