துளிகள் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்...

Added : நவ 17, 2021
Share
Advertisement
அ.தி.மு.க., பொன்விழாதிருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கட்சியின் பொன்விழா கொண்டாடப்படுகிறது. கடந்த வாரம், ஏ.டி., காலனி மக்கள் பயன்பாட்டுக்கு டேபிள், 25 சேர்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி, 44வது வார்டு, ஜம்மனை காலனி மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் உதவிகளை வழங்கினர். முன்னாள்

அ.தி.மு.க., பொன்விழாதிருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கட்சியின் பொன்விழா கொண்டாடப்படுகிறது. கடந்த வாரம், ஏ.டி., காலனி மக்கள் பயன்பாட்டுக்கு டேபிள், 25 சேர்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி, 44வது வார்டு, ஜம்மனை காலனி மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் உதவிகளை வழங்கினர். முன்னாள் கவுன்சிலர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, ஏ.டி.பி., செயலாளர் கண்ணபிரான் உட்பட பலர் பங்கேற்றனர்.குட்டையால் அச்சம்மக்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், அதன் தலைவர் கார்மேகம், மண்டல தலைவர் நாகராஜ், மாவட்ட தலைவர் செல்வராஜ், ஆகியோர் தலைமையில், மாநகராட்சி உதவி கமிஷனர் கண்ணனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், 19வது வார்டு பாலன் நகரில், 30 அடி ஆழ குட்டை ரோட்டோரம் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. அதில் தேங்கும் தண்ணீரை நல்லாற்றுக்கு திருப்பி விட வேண்டும். வார்டுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், என குறிப்பிட்டுள்ளனர்.தண்ணீருக்கு தவிப்புதிருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, 8,9,10 மற்றும், 11 வார்டு மக்கள் சார்பில், பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தனிடம் வழங்கப்பட்ட மனுவில், 'ஏழு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது, 20 நாளுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. இதனால், சிரமப்படுகிறோம். தண்ணீர் வினியோகத்தை சீராக்க வேண்டும்,' என கூறியுள்ளனர்.ஆலோசனை கூட்டம்பல்லடத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்ட அவை தலைவர் பரமசிவம், நகர செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஆனந்தன் பேசுகையில்,''கொங்கு மண்டலம் எப்போதும் அ.தி.மு.க., கோட்டையாக இருந்து வருகிறது. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை போல், உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என்றார். நிர்வாகிகள் வைஸ் பழனிசாமி, பானு பழனிசாமி, தர்மராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.மினி பஸ் மீது நடவடிக்கைதிருப்பூரில் ேஷர் ஆட்டோ, மினிபஸ்களில் அதிகளவு பயணிகள் அழைத்து வருகின்றனரா என்பது குறித்து, வட்டார போக்குவரத்து துறையினர், போலீசார் திடீர் ஆய்வு நடத்தினர். இதில், போக்குவரத்து விதிமுறை மீறியதற்காக பத்து ேஷர் ஆட்டோ, இரண்டு மினிபஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில், 'அரசு நிர்ணயித்துள்ள வழித்தடத்தில் மட்டுமே ேஷர் ஆட்டோ மற்றும் மினி பஸ்களை இயக்க வேண்டும். விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்,' என்றனர்.மரக்கன்று வழங்கல்வெள்ளகோவில் வட்டாரத்திலுள்ள விவசாயிகளுக்கு, பசுமை போர்வை திட்டத்தின் கீழ் பலன் தரும் மரக்கன்றுகளை மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிப்பு செய்ய தொடர்ச்சியாக வரும் மூன்று ஆண்டுகளுக்கு, ஒரு மரக்கன்றுக்கு ஏழு ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தால், பண்ணை பகுதியை ஆண்டு முழுவதும் பசுமையாக மாற்றுவதுடன், நல்ல லாபம் ஈட்டவும் முடியும் என, வட்டார வேளாண் விரிவாக்க மையம் வேளாண் உதவி இயக்குனர் பொன்னுசாமி தெரிவித்தார்.மாணவருக்கு பாராட்டு'நேஷனல் மெரிடியல் ஆர்ட்ஸ் அண்ட் யோகா அசோசியேஷன்' சார்பில், சென்னை, தாம்பரத்தில் மாநில கராத்தே, சிலம்பம், யோகா, கும்பு போட்டி நடந்தது. இதில், திருப்பூர், செரங்காடு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர் அருணவர், கட்டா பிரிவில் முதல் பரிசும், கும்தே பிரிவில் மூன்றாம் பரிசும் பெற்றார். பரிசு வென்ற மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமா, பயிற்சியாளர் நாகேந்திரன் உட்பட பலர் பாராட்டினர்.நுகர்வோர் குறைகேட்புதிருப்பூர் மாவட்ட அளவிலான, காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், 25ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. டி.ஆர்.ஓ., தலைமையில் நடக்கும் கூட்டத்தில், எண்ணெய் நிறுவனங்களும், காஸ் ஏஜன்சிகளும் பங்கேற்க உள்ளன. எனவே, இந்த கூட்டத்தில், காஸ் நுகர்வோர், காஸ் புத்தகத்துடன் பங்கேற்று, தங்களது குறைபாடுகளை தெரிவித்து, தீர்வு பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.'குட்கா' விற்றவர் கைதுதிருப்பூர், காந்திநகர் ஏ.பி.நகரை சேர்ந்தவர் நிக்சன், 53, அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து அப்பகுதியினர் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து, 13 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X