சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உரம் தட்டுப்பாடு: சாலைமறியல்

Added : நவ 17, 2021
Share
Advertisement
கமுதி--கமுதி அருகே கீழராமநதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உரம் மூடை வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உரம் தட்டுபாட்டால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். கீழராமநதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உர மூடை வழங்காமல் அலைக்கழித்துள்ளனர். ஆத்திரமடைந்த விவசாயிகள்

கமுதி--கமுதி அருகே கீழராமநதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உரம் மூடை வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உரம் தட்டுபாட்டால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். கீழராமநதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உர மூடை வழங்காமல் அலைக்கழித்துள்ளனர். ஆத்திரமடைந்த விவசாயிகள் கமுதி--அருப்புக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் அதிகாரிகளுடன் பேசி உரம் மூடை வழங்க நடவடிக்கை எடுத்தார். இதை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். போராட்டத்தால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர்கீழராமநதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் போலீஸ் பாதுகாப்புடன் உரம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X