செய்தி செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் வசதிக்காக வாக்காளர் சிறப்பு முகாம்: தேர்தல் கமிஷன் ஏற்பாடு; பயன்படுத்தி கொள்ள அழைப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
திருப்பூர்: தொழிலாளர்கள், விடுமுறை நாளில் விண்ணப்பிக்க வசதியாக, வரும் 20 , 21ம் தேதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடக்குமென, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்திய தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணி நடந்து வருகிறது. பெயர் சேர்க்க, படிவம் -6, பெயர் நீக்க, படிவம் -7, திருத்தம் செய்ய, படிவம் 8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய,



திருப்பூர்: தொழிலாளர்கள், விடுமுறை நாளில் விண்ணப்பிக்க வசதியாக, வரும் 20 , 21ம் தேதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடக்குமென, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்திய தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணி நடந்து வருகிறது. பெயர் சேர்க்க, படிவம் -6, பெயர் நீக்க, படிவம் -7, திருத்தம் செய்ய, படிவம் 8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய, படிவம் 8 ஏ ஆகிய படிவங்களில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.சிறப்பு முகாம்களில், 22 ஆயிரத்து, 522 பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயர் சேர்க்க, 15 ஆயிரத்து, 828 பேர்; பெயர் நீக்கம் செய்ய, 2,365 பேர்; திருத்தம் செய்ய, 2,210 பேர்; ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய, 2,119 பேர் விண்ணப்பித்துள்ளனர்.வரும், 27, 28 ல் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடக்க இருந்த நிலையில், தொழிலாளர் வசதிக்காக, 20, 21ம் தேதிகளிலும் சிறப்பு முகாம் நடக்குமென, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.கலெக்டர் வினீத் கூறுகையில்,''முதல்கட்ட சிறப்பு முகாம் முடிந்த நிலையில், வரும், 20, 21 மற்றும் 27, 28 ஆகி நாட்களிலும், காலை, 9:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை சிறப்பு முகாம் நடக்கும். பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய, உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம்.மேலும், www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் voter helpline என்ற 'மொபைல் ஆப்' மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்,'' என்றார்.படிவம் -6 ஏ 'மிஸ்சிங்'தொழில் நிமித்தமாக, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும், வாக்காளர் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.வெளிநாடுகளில் வசிப்பவர், படிவம் -6'ஏ' மூலம் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும்.கடந்த சிறப்பு முகாம்களிலும், ஓட்டுச்சாவடி முகாம்களிலும், படிவம் - 6'ஏ' வழங்கப்படவில்லை என, அனைத்து கட்சி பிரதிநிதிகள், தேர்தல் பார்வையாளரிடம் புகார் அளித்துள்ளனர். இனிமேல், அனைத்து படிவங்களையும் முகாம்களில் வழங்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X