சுவாமியே... சரணம் ஐயப்பா! | Dinamalar

துளிகள் செய்தி

தமிழ்நாடு

சுவாமியே... சரணம் ஐயப்பா!

Added : நவ 17, 2021
Share
திருப்பூர்: கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று, ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.தமிழகத்தில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான பக்தர்கள், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர். கார்த்திகை மாதம் தை மாதம் வரை, தொடர்ந்து பக்தர்கள் குழு, சபரிமலை சென்று வருகிறது.கார்த்திகை மாதப்பிறப்பான நேற்று, ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதல் மாலை

திருப்பூர்: கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று, ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.தமிழகத்தில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான பக்தர்கள், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர். கார்த்திகை மாதம் தை மாதம் வரை, தொடர்ந்து பக்தர்கள் குழு, சபரிமலை சென்று வருகிறது.கார்த்திகை மாதப்பிறப்பான நேற்று, ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதல் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். திருப்பூர் ஸ்ரீஐயப்பன் கோவிலில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், சமூக இடைவெளியுடன் சென்று, ஐயப்பனை வழிபட்டனர்.கருப்பு மற்றும் நீலநிற வேட்டியை அணிந்து, குருசாமியின் முன்பாக மண்டியிட்டு பிரார்த்தனை செய்தனர். குருசாமி, துளசிமணி மாலை அணிவித்து, அருளாசி வழங்கினார். தொடர்ந்து, ஐயப்பனை தரிசனம் செய்து, வழக்கமான பணிக்கு திரும்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X