தென்னை மரம் ஏறியவர் மீது மின்சாரம் பாய்ந்து அதிர்ச்சி : பத்திரமாக மீட்ட வீரர்கள்

Added : நவ 17, 2021
Share
Advertisement
திருப்பூர்: குண்டடத்தில், தென்னை மரம் ஏறிய, 75 வயது முதியவர் மீது மின்சாரம் பாய்ந்து, சிக்கி கொண்டார். அவரை பல்லடம் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.குண்டடம், நந்தவனபாளையம், தெக்கலுாரை சேர்ந்தவர் ஆயிமுத்து, 75. தேங்காய் பறிக்கும் தொழிலாளி. நேற்று நாவிதன்புதுார், மணியார் தோட்டத்தில் தேங்காய் பறித்து போடும் வேலைக்கு சென்றிருந்தார். 65 அடி உயரம் கொண்ட மரத்தில் ஏறி,



திருப்பூர்: குண்டடத்தில், தென்னை மரம் ஏறிய, 75 வயது முதியவர் மீது மின்சாரம் பாய்ந்து, சிக்கி கொண்டார். அவரை பல்லடம் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.குண்டடம், நந்தவனபாளையம், தெக்கலுாரை சேர்ந்தவர் ஆயிமுத்து, 75. தேங்காய் பறிக்கும் தொழிலாளி. நேற்று நாவிதன்புதுார், மணியார் தோட்டத்தில் தேங்காய் பறித்து போடும் வேலைக்கு சென்றிருந்தார். 65 அடி உயரம் கொண்ட மரத்தில் ஏறி, தேங்காய் பறித்து கொண்டிருந்தார்.திடீரென, அவ்வழியாக சென்ற மின்ஒயர், திடீரென தென்னை மட்டையில் பட்டு, ஆயிமுத்து மீது மின்சாரம் பாய்ந்தது. மரத்திலேயே மயக்கமடைந்து, மரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.தகவலறிந்து விரைந்து சென்ற பல்லடம் தீயணைப்பு வீரர்கள், முதியவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதியவரை பத்திரமாக மீட்டு, கீழே அழைத்து வந்து, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X