வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு பள்ளிக்கு செல்வதில் சிக்கல்| Dinamalar

வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு பள்ளிக்கு செல்வதில் சிக்கல்

Added : நவ 17, 2021
Share
திருப்பூர்: தொரவலுார் அரசு பள்ளிக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்துள்ளதால், பள்ளிக்கு வாகனம் சென்றுவர முடியாத அளவுக்கு சிரமம் ஏற்படுவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.திருப்பூர் ஒன்றியம், தொரவலுார் ஊராட்சிக்கு உட்பட்ட, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஊராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது. பள்ளி கட்டடம், அடுத்துள்ள ஆசிரியர் குடியிருப்பு கட்டடம், கோவில்,

திருப்பூர்: தொரவலுார் அரசு பள்ளிக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்துள்ளதால், பள்ளிக்கு வாகனம் சென்றுவர முடியாத அளவுக்கு சிரமம் ஏற்படுவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.திருப்பூர் ஒன்றியம், தொரவலுார் ஊராட்சிக்கு உட்பட்ட, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஊராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது. பள்ளி கட்டடம், அடுத்துள்ள ஆசிரியர் குடியிருப்பு கட்டடம், கோவில், சமுதாயக்கூடம் ஆகிய இடங்களுக்கு சென்றுவர, 40 அடி அகலமுள்ள வழித்தடம் உள்ளது.கிராம நிர்வாக அலுவலக பதிவேட்டின்படி, க.ச., 408/11 என்ற இடம் புறம்போக்கு என்றும், 408/12 வண்டிப்பாதை என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் வீடு கட்டி வசிக்கும் ஒரு குடும்பத்தினர், புறம்போக்கு நிலத்தில் உள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்தி, வீட்டை விஸ்தரிக்க முடிவு செய்துள்ளனர்.பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மின்கம்பம் நகர்த்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு குடும்பத்தை சேர்ந்த நபர்கள், வண்டிப்பாதையை ஆக்கிரமித்துள்ளனர்.இதுகுறித்து தொரவலுார் மக்கள் கூறுகையில்,'பள்ளி, கோவில், சமுதாயக்கூடம் சென்றுவரும் வழித்தடம், தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பில் உள்ளது. மொத்தம் உள்ள, 40 அடி வழித்தடத்தில், 10 அடி மட்டுமே பயன்பாட்டில் உள்ளது; மீதியிடம் ஆக்கிரமிப்பில் உள்ளது. தாசில்தார், ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்ட பிறகும், நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம், அரசு ஆவணங்களின்படி, நில அளவை செய்து, ஆக்கிரமிப்பில் உள்ள வண்டிப்பாதை நிலத்தை மீட்டுத்தர வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஆர்.டி.ஓ., ஜெகநாதனிடம் கேட்டபோது, '' நில ஆக்கிரமிப்பு தொடர்பான மேல்முறையீடு வந்துள்ளது. தாசில்தாரிடம் விரிவான அறிக்கையை பெற்று, பொதுமக்கள் வாக்குமூலம் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X