பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட்: டெல்டா மற்றும் 12 மாவட்டத்தில் கனமழை கொட்டும்

Updated : நவ 18, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நாளை ( நவ.,19) சென்னைக்கு அருகில் கரையை கடக்கக்கூடும். இதனால், டெல்டா மற்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அக்டோபர் 25ல் வடகிழக்கு பருவ மழை துவங்கியது. மழை துவங்கியது முதலே வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதி என்று,
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட்!'

சென்னை : வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நாளை ( நவ.,19) சென்னைக்கு அருகில் கரையை கடக்கக்கூடும். இதனால், டெல்டா மற்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 25ல் வடகிழக்கு பருவ மழை துவங்கியது. மழை துவங்கியது முதலே வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதி என்று, பல்வேறு மழை காரணிகள் உருவாகி, மாநிலம் முழுதும் தொடர்ச்சியாக கன மழை பெய்த வண்ணம் உள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியிலும் அதி கன மழையால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்னும் பல இடங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை.


மீண்டும் மிரட்டல்


latest tamil news



சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கை: தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று(நவ.,18) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை(நவ.,19) காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்கக்கூடும்.

இதன் காரணமாக, இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும்
அரியலூர், பெரம்பலூர் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும்,
திருச்சி, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.
நாளை திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும்,
சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், திருப்பூர் மாவட்டம் குந்தலத்தில் 20 செ.மீ., தாராபுரத்தில் 13 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை இன்று, தென்மேற்கு வங்க கடல், தமிழகம் மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை தமிழகம் மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். இதனால், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் புவியரசன் தெரிவித்துள்ளார்.


அரபிக் கடலின் ஆதிக்கம்


கடலோரம் அல்லாத மற்ற மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் கன மழை பெய்தது. அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியையும், வங்கக் கடலில் தமிழகத்தை நோக்கி நகர்ந்துள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியையும் இணைக்கும் வகையில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.அரபிக் கடலில் உருவாகியுள்ள கருமேக கூட்டங்கள், கர்நாடகா துவங்கி கேரளா மற்றும் தமிழக உள் மாவட்டங்களை சூழ்ந்து, கன மழையாக கொட்டுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில், ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்த மழையால், பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.சில பகுதிகளில் வெள்ளம் இன்னும் முழுமையாக வடியவில்லை.

இந்நிலையில், மீண்டும் கன மழை பெய்தால் வெள்ள பாதிப்பு அதிகரிக்குமே என, மக்கள் பீதி அடைந்துஉள்ளனர். பாதிப்புகள் ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளது.


பள்ளி, கல்லுாரிக்கு விடுமுறை


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, வேலுார் ஆகிய மாவட்டங்களில், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasamy - sydney,ஆஸ்திரேலியா
18-நவ-202122:36:32 IST Report Abuse
Ramasamy 12 மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை புயல் மழை காரணமாக விடுமுறை விட்டுள்ளார்கள். ஆனால் செங்கல்பட்டு ஆட்சியர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விட்டுள்ளார். பெரும் பலான கல்லூரிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதாவது சென்னை புறநகரில் இருகின்றனர். அங்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து வந்து படிக்கிறார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புயல் மழை,வெள்ளம்(அதனால் தான் விடுமுறை விட்டு உள்ளார்கள் ) இருக்கும் போது, அங்கிருக்கும் மாணவர்கள் எப்படி செங்கல்பட்டு மாவட்டம் கல்லூரிகளுக்கு வரமுடியும். செங்கல்பட்டு மாவட்டமும் ஆரஞ்சு அலர்ட்டு உள்ளது. அந்த மாவட்ட ஆட்சியரும் இதனை யோசித்து கல்லூரிக்களுக்கும் விடுமுறை விட வேண்டும்.
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
18-நவ-202111:17:54 IST Report Abuse
ram சென்னை ஊட்டி போல இருக்குது மக்கள் எல்லாம் சந்தோசமாக இருக்கிறார்கள் - ஆர் எஸ் பி மீடியா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X