அரசியல் செய்தி

தமிழ்நாடு

20 பொருளுடன் பொங்கல் பரிசு :முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Updated : நவ 19, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (17+ 57)
Share
Advertisement
சென்னை :தமிழக மக்கள், தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட, அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு, 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு சார்பில், ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு, அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
20 பொருள்கள், பொங்கல் பரிசு  ,ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை :தமிழக மக்கள், தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட, அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு, 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு சார்பில், ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு, அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.


எதிர்பார்ப்புஅ.தி.மு.க., ஆட்சியில் பரிசுத் தொகுப்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் இடம் பெற்றிருந்தன. மேலும், 2,500 ரூபாயும் வழங்கப்பட்டது. இதற்காக, 5,604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டது. நேற்று, முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தார்.இந்த ஆண்டு பரிசு தொகுப்பில், பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்கு தேவையான, மஞ்சள் துாள், மிளகாய் துாள், மல்லித்துாள்.கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு ஆகிய மளிகைப் பொருட்களும், துணிப்பையில் வழங்கப்படும்.


முழு கரும்பு'மொத்தம், 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, 1,088 கோடி ரூபாய் செலவில், பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்' என, முதல்வர் அறிவித்து உள்ளார்.பொங்கல் தொகுப்பில், கரும்பு இடம் பெறாததற்கு விவசாய சங்கப் பிரநிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் அறிவிப்புக்கு பின், பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, ''பொங்கல் தொகுப்புடன், முழு கரும்பு வழங்கப்படும்,'' என்றார்.அதே நேரம், முதல்வர் அறிவித்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள, 20 பொருட்களில் துணிப்பை தவிர மற்ற பொருட்கள் எவ்வளவு கிராம் வழங்கப்படும் என்ற விபரம் அறிவிக்கப்படவில்லை.


'தரமான பொருட்கள் தருவோம்' உணவுத் துறை அமைச்சர்சக்கரபாணி அளித்த பேட்டி:பொங்கல் தொகுப்புடன், கரும்பு வழங்குவது வாடிக்கை. அதையும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இம்முறை முழு கரும்பு வழங்கப்படும். கடந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. எனவே, குடும்பத்துக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஆட்சியாளர்கள் அதை ஏற்கவில்லை. 1,௦௦௦ ரூபாய் மட்டும் வழங்கினர். அப்போது ஸ்டாலின், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 5,000 ரூபாய் வழங்குவோம். அப்போதைய அரசு, 1,000 ரூபாய் வழங்கிய நிலையில், மீதி 4,000 ரூபாய் வழங்கப்படும்' என அறிவித்தார்.அதன்படி ஆட்சிக்கு வந்ததும், 4,000 ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த ஆட்சியில், பொங்கல் தொகுப்புடன், 2,௫00 ரூபாய் எதற்காக வழங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.ஒவ்வொரு கடைக்கும், பொங்கல் தொகுப்பு முறையாக சென்றடைவதை கண்காணிக்க, ஒவ்வொரு வட்ட அளவில், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. அவை தரமானதாக இருந்ததாக அனைவரும் பாராட்டினர். அதேபோல, பொங்கல் தொகுப்பும், தரமான பொருட்களாக வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


பணம் உண்டா?பொங்கல் தொகுப்பில் பணம் இடம் பெறாதது, மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கன மழையால் பாதிக்கப்பட்ட மக்கள், நிவாரணத் தொகையை எதிர்பார்த்தபடி உள்ளனர்.
எனவே, பொங்கல் தொகுப்பில், ரொக்கம் வழங்குவதை நிறுத்திவிட்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் மழை நிவாரணம் வழங்குவது குறித்து, ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேநேரம் நிதி நெருக்கடியும், அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. எனவே, நாளை நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு பின், அரசின் முடிவு தெரியவரும்.

Advertisement
வாசகர் கருத்து (17+ 57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
24-நவ-202103:40:01 IST Report Abuse
meenakshisundaram இந்த பொங்கலை மக்கள் கொண்டாடத்தான் இப்போதுள்ள நிலையில் இது தேவையா? முதலில் தெரு வீடுகளில் உள்ள நீரை அகற்றி பாதித்துள்ள மக்களுக்கு நிவாரணம். பிறகு அங்கங்கே தேவை இன்றி குழுக்களை கலைத்தல் (அரசில் ஏற்கனவே தேவையான அதிகாரிகளும் அதிகாரங்களும் உள்ளனவே) பஞ்சப்படியை முறையாக வழங்குதல் அம்மா உணவகங்களை நல்ல முறையில் நடத்துதல் டாஸ்மாக் கடைகளை மூடுதல் (கனிமொழி எங்கே?) மற்றும் மது தயாரிப்புக்கு தொழிற்சாலைகளை நடத்தும் திமுகவினரை குறைத்தல் அல்லது மொத்தமே மூடு விழா செய்தல் மத இந வேறுபாடுகளை தூண்டுவோர் மீது நடவடிக்கைகள் ,அரசுக்கு எதிராக பேசியோர் மீது எடுத்த நடவடிக்கைகளை கைவிடுதல் சரியான முறையில் ஊழல் இல்லாத முறையில் ஆட்சி நடத்துதல் என்பதையே இந்த கட்சிக்கு வாக்களித்தவர்களும் மற்ற பொது மக்களும் எதிர்பார்க்கினறனர். செய்ய வேண்டும் இந்த அரசு .பொங்கலுக்கு இரு மாதங்கள் இருக்கும் போதே திசை திருப்பும் இந்த அறிக்கை தேவையா ?
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் ஆக ஆக ஆஹா!!!. எனக்கு 20 பொருளுடன் 21 வது பொருளாக இன்பாண்ணா போட்டோதான் வேணும்!!!
Rate this:
Cancel
18-நவ-202122:12:46 IST Report Abuse
தேவதாஸ், புனே தலைவரே.... இதெல்லாம் எதுக்கு? நேரா, தினமும் மூனு நேரம் சோறு, 10 ரூபாய் பேட்டா......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X