குழந்தைகள் ஆணையம் இன்று விசாரணை | Dinamalar

தமிழ்நாடு

குழந்தைகள் ஆணையம் இன்று விசாரணை 

Added : நவ 17, 2021
Share
கோவை: கோவை தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், இன்று விசாரணை நடத்துகிறது.கோவையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர், பாலியல் தொந்தரவு அளித்ததால், சமீபத்தில் மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போக்சோ சட்டத்தில், வழக்கு பதிவு செய்து, சம்பந்தபட்ட ஆசிரியர், பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டனர்.வழக்கு விசாரணை

கோவை: கோவை தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், இன்று விசாரணை நடத்துகிறது.கோவையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர், பாலியல் தொந்தரவு அளித்ததால், சமீபத்தில் மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போக்சோ சட்டத்தில், வழக்கு பதிவு செய்து, சம்பந்தபட்ட ஆசிரியர், பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டனர்.வழக்கு விசாரணை நிலை குறித்து ஆய்வு செய்யும் வகையில், தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில், இன்று (நவ., 18) விசாரணை நடக்கிறது. ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, சட்ட உறுப்பினர் ராமராஜ் உட்பட நான்கு பேர் கொண்ட விசாரணை அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முன் ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு, வழக்கின் புலன் விசாரணை அலுவலர், மாணவியின் பெற்றோர், பள்ளி செயலாளர், தாளாளர் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கை தாமாக முன்வந்து, குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்துகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X