செய்தி செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் கனமழை: வீடுகளில் புகுந்த வெள்ளம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
ஊட்டி: ஊட்டியில் பெய்த கனமழைக்கு, 200 வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நேற்று மாலைஇடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இரவு முழுவதும் மழை தொடர்ந்தது.ஊட்டிசேரிங்கிராஸ் பகுதியில் பல கடைகள், கமர்ஷியல் சாலை, கிரீன் பீல்டு, நகராட்சி மார்க்கெட்கடைகளில் வெள்ளம் புகுந்தது. காந்தள் குருசடி காலனி, பென்னட் மார்க்கெட் உட்பட பல

ஊட்டி: ஊட்டியில் பெய்த கனமழைக்கு, 200 வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நேற்று மாலைஇடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இரவு முழுவதும் மழை தொடர்ந்தது.ஊட்டிசேரிங்கிராஸ் பகுதியில் பல கடைகள், கமர்ஷியல் சாலை, கிரீன் பீல்டு, நகராட்சி மார்க்கெட்கடைகளில் வெள்ளம் புகுந்தது. காந்தள் குருசடி காலனி, பென்னட் மார்க்கெட் உட்பட பல இடங்களில், 200 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.புதுநகர் பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து வீட்டின் மேல் விழுந்தது. வீடுக்குள், எட்டு பேர் சிக்கி கொண்டனர்.தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர், நகராட்சி ஊழியர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.பஸ் ஸ்டாண்ட் பகுதியை மழைநீர் சூழ்ந்ததால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. படகு இல்ல சாலையில் தேங்கிய வெள்ளத்தில், சுற்றுலா வாகனம் சிக்கியது. இரண்டு மணிநேரம் போராடி மீட்கப்பட்டது. பந்தலுாரில் தமிழக- கேரள வாகனங்கள் செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், 'மக்கள் அவசர தேவைக்கு, 1077 என்ற எண்ணில், 24 மணி நேரமும் அழைக்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிவாரண முகாம்களில் இரவில் தங்கி கொள்ளலாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X