பொது செய்தி

இந்தியா

ஐ.நா.,வின் சுற்றுலாவுக்கான சிறந்த கிராமங்கள்: தெலுங்கானாவின் போச்சம்பள்ளி தேர்வு!

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஐதராபாத்: ஐ.நா., உலக சுற்றுலா அமைப்பின் சிறந்த சுற்றுலா கிராமங்கள் பட்டியலில் 'இக்கட்' பட்டுப் புடவைகளுக்கு பெயர்பெற்ற தெலுங்கானாவின் போச்சம்பள்ளி தேர்வாகியிருக்கிறது. டிசம்பர் 2 ஸ்பெயினில் நடைபெறும் நிகழ்வில் இதற்கான விருது வழங்கப்படும்.ஐ.நா., உலக சுற்றுலா அமைப்பு ஆரம்பக்கட்டமாக இது போன்று கிராமங்களுக்கு விருது அளிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது. கிராமப்புற
Pochampally, Telangana Village, Best Tourism Villages, UN, United Nations

ஐதராபாத்: ஐ.நா., உலக சுற்றுலா அமைப்பின் சிறந்த சுற்றுலா கிராமங்கள் பட்டியலில் 'இக்கட்' பட்டுப் புடவைகளுக்கு பெயர்பெற்ற தெலுங்கானாவின் போச்சம்பள்ளி தேர்வாகியிருக்கிறது. டிசம்பர் 2 ஸ்பெயினில் நடைபெறும் நிகழ்வில் இதற்கான விருது வழங்கப்படும்.

ஐ.நா., உலக சுற்றுலா அமைப்பு ஆரம்பக்கட்டமாக இது போன்று கிராமங்களுக்கு விருது அளிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது. கிராமப்புற இடங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக அவை விளங்க வேண்டும். மேலும் அதன் ஒன்பது மதிப்பீட்டு பகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். அத்தகைய கிராமங்கள் விருது பெறும். இந்தியாவிலிருந்து கோங்தாங் - மேகாலயா, லத்புரா காஸ் - ம.பி., மற்றும் தெலுங்கானாவின் போச்சம்பள்ளி ஆகிய மூன்று கிராமங்களை மத்திய சுற்றுலா அமைச்சகம் பரிந்துரைத்தது.


latest tamil news


அதில் தெலுங்கானாவின் போச்சம்பள்ளி தேர்வாகியுள்ளது. ஐதராபாத்தில் இருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ள போச்சம்பள்ளி, தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இங்கு 'இக்கட்' எனப்படும் பிரத்யேக பாணியில் நெய்யப்படும் நேர்த்தியான பட்டுப் புடவைகள் பிரபலம். இந்தியாவின் பட்டு நகரம் என்றும் இதனை அழைப்பர். போச்சம்பள்ளி இக்கட் பட்டுப் புடவைகள் 2004-ம் ஆண்டிலேயே புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

இவ்விருது அறிவிப்பிற்காக கிராம மக்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: தன்னிறைவு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகவும், பிரதமர் மோடியின் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் என்ற மந்திரத்தாலும் போச்சம்பள்ளியின் தனித்துவமான நெசவு பாணி சிறப்பு கவனம் பெற்றன. இந்த விருது கிடைத்துள்ளதற்கு குறிப்பாக போச்சம்பள்ளி மக்கள் சார்பாகவும், தெலுங்கானா மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதன் சிறப்புகளை எடுத்துக்காட்டிய அமைச்சக அதிகாரிகளுக்கும் நன்றி. என கூறினார்

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
18-நவ-202106:14:23 IST Report Abuse
NicoleThomson வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-நவ-202104:33:14 IST Report Abuse
J.V. Iyer பாராட்டுக்கள். தமிழ் நாட்டில் அதிகம் டாஸ்மாக் உள்ள கிராமத்தை தெரிவு செய்து அனுப்பி இருப்பாங்களோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X