ஆராய்ச்சி மைய நெல் பயிர் காட்டு யானைகளால் சேதம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
கூடலுார்: கூடலுார் நெல் ஆராய்ச்சி மையத்தில் நுழைந்த காட்டு யானைகள், நெற்பயிர்களை மிதித்து சேதம் செய்தன.நீலகிரி மாவட்டம், கூடலுார் புளியாம்பாறையில், கோவை வேளாண்மை பல்கலை கழகத்துக்கு சொந்தமான, ஒட்டு நெல் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு ஆராய்ச்சி மற்றும் விதை நெல்லுக்காக, நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த மாதம் அறுவடை பணி நடக்க உள்ளது.நேற்று முன்தினம் இரவு, காட்டு

கூடலுார்: கூடலுார் நெல் ஆராய்ச்சி மையத்தில் நுழைந்த காட்டு யானைகள், நெற்பயிர்களை மிதித்து சேதம் செய்தன.நீலகிரி மாவட்டம், கூடலுார் புளியாம்பாறையில், கோவை வேளாண்மை பல்கலை கழகத்துக்கு சொந்தமான, ஒட்டு நெல் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு ஆராய்ச்சி மற்றும் விதை நெல்லுக்காக, நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த மாதம் அறுவடை பணி நடக்க உள்ளது.நேற்று முன்தினம் இரவு, காட்டு யானைகள் ஆராய்ச்சி மையத்தில் நுழைந்து, நெற்பயிர்களை மிதித்து சேதம் செய்தன. நேற்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். புளியாம்பாறை மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் முகாமிட்டுள்ள இரண்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. நெல் ஆராய்ச்சி மையத்தில், நெற்பயிர்களை சேதம் செய்துள்ளன. யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X