சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜீவசமாதி அடைந்த சாணார்பட்டி சாமியார்

Added : நவ 17, 2021
Share
Advertisement
சாணார்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் -சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டியைச் சேர்ந்த முதியவர் கரந்தமலை 75, ஜீவசமாதி அடையும் முயற்சியில் தானாக மணல் மூடைகளை அடுக்கி வைத்து இறந்தார்.ஆவிளிபட்டியில் வசித்த கரந்தமலையின் மனைவி 2001 ல் இறந்து விட்டார். இவரது 3 மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். வீட்டில் தனியாக வசித்த கரந்தமலைக்கு ஆன்மிக நாட்டம் அதிகம். நீண்ட ஜடாமுடியுடன்

சாணார்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் -சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டியைச் சேர்ந்த முதியவர் கரந்தமலை 75, ஜீவசமாதி அடையும் முயற்சியில் தானாக மணல் மூடைகளை அடுக்கி வைத்து இறந்தார்.
ஆவிளிபட்டியில் வசித்த கரந்தமலையின் மனைவி 2001 ல் இறந்து விட்டார். இவரது 3 மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். வீட்டில் தனியாக வசித்த கரந்தமலைக்கு ஆன்மிக நாட்டம் அதிகம். நீண்ட ஜடாமுடியுடன் காணப்படும் இவர், வீட்டருகே உள்ள பாண்டிமுனீஸ்வரர் கோயிலில் பூஜை செய்வது வழக்கம். குறிசொல்லும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
கடந்த வெள்ளி முதல் அவரை காணவில்லை. அவர் வீட்டின் அருகே துர்நாற்றம் வீசியது. சாணார்பட்டி போலீசார் அவரது வீட்டுக்கு வந்து பார்த்தனர். அங்கு சுற்றிலும் மணல் மூடையை அடுக்கி வைத்து, அதன் நடுவே ஜீவசமாதி அடையும் முயற்சியில் கரந்தமலை ஈடுபட்டது தெரிந்தது. மூடையில் இருந்து தானாகவே தனது மேல் மணல் விழும் வகையில் ஏற்பாடு செய்தவர், மண்மூடி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
சாணார்பட்டி போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X