தமிழ்நாடு

ஆபாச படம் பகிர்ந்த 31 நபர்கள் கோவையில் சி.பி.ஐ., சோதனை  

Added : நவ 17, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்: குழந்தைகள் ஆபாச பட விவகாரம் தொடர்பாக, கோவை அருகே பெட்டதாபுரத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.குழந்தைகளை ஆபாசமாக சித்தரிப்பதோ, ஆபாச படங்களை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்வதோ, சேகரித்து வைப்பதோ, பிறருக்கு அனுப்புவதோ, தகவல் தொழில்நுட்ப சட்டப்படி குற்றம். டில்லி, பஞ்சாப், மத்திய பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில்

பெ.நா.பாளையம்: குழந்தைகள் ஆபாச பட விவகாரம் தொடர்பாக, கோவை அருகே பெட்டதாபுரத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.குழந்தைகளை ஆபாசமாக சித்தரிப்பதோ, ஆபாச படங்களை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்வதோ, சேகரித்து வைப்பதோ, பிறருக்கு அனுப்புவதோ, தகவல் தொழில்நுட்ப சட்டப்படி குற்றம். டில்லி, பஞ்சாப், மத்திய பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும், 31 நபர்கள், 'வாட்ஸ் ஆப் குரூப்' ஏற்படுத்திக் கொண்டு, ஆபாச படங்கள், லீங்க், வீடியோ பகிர்ந்துள்ளனர்.இது தொடர்பாக, டில்லியில் உள்ள மத்திய புலனாய்வுத் துறை சிறப்பு குற்றப்பிரிவுக்கு புகார் வந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள, 31 நபர்களின் வீடுகளில் நேற்று முன்தினம் சி.பி.ஐ., அதிரடி சோதனை நடத்தியது.கோவை பெரியநாயக்கன்பாளையம் பெட்டதாபுரத்தில், ஆதித்தியன், 22, என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை சி.பி.ஐ., இன்ஸ்பெக்டர் பொன்மாணிக்கவேல் தலைமையில், நான்கு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அவர் மீது, தகவல் தொழில்நுட்ப பிரிவு சட்டம், 67 பி மற்றும் இந்திய தண்டனை சட்டம், 120 பி (சதி செய்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் பயன்படுத்திய மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X