திருப்பூர்: கற்றல் திறன் குறைபாடுள்ள குழந்தைகளை கையாளுவது குறித்து, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
வகுப்பறையில், கல்வியில் பின்தங்கும் குழந்தைகள், மெல்ல கற்போராக இருக்கலாம் என்பதால், அதுபோன்ற குழந்தைகள் மீது, பெற்றோரும், ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:கற்றல் திறன் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து, ஆசிரியர்கள் தன்னம்பிக்கை அளிக்க வேண்டும்.குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பேசி, குறைபாடுகளை சரி செய்யலாம்; பெற்றோரை அழைத்து பேசலாம்.சிறப்பு பயிற்சி முறைகளை உருவாக்கி, பயிற்சி அளிக்க வேண்டும். இத்தகைய குழந்தைகளை, முதல்வரிசையில் அமர வைத்து வகுப்பு நடத்த வேண்டும்.கற்றல் திறன் குறைபாடு மற்றும் மெல்ல கற்கும் குழந்தைகளை கையாளுவது குறித்து, ஆசிரியர் மற்றும் பெற்றோருக்கான கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.