திருப்பூர்: கடந்த அக்., மாதம், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 9,387 கோடியாக, அதாவது, 8.53 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கொரோனா பாதிப்புகளிலிருந்து விடுபட்டு, வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரலில் 9,661 கோடி ரூபாய்க்கு சென்ற ஏற்றுமதி வர்த்தகம், கொரோனா இரண்டாவது அலையால், ஜூன் மாதம், 7,367 கோடியாக சரிந்துவிட்டது.கடந்த ஜூலை மாதம் முதல், இந்திய ஆடை ஏற்றுமதி வர்த்தகம் எழுச்சி பெற்றுவருகிறது. ஜூலையில், 10 ஆயிரத்து 347 கோடி, ஆக., - 9,175 கோடி, செப்., - 9,566 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்படி, அக்., மாதம், நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 9,387 கோடிக்கு நடந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் அக்., மாதத்தைவிட, நடப்பு ஆண்டு, 8.53 சதவீதம் ஏற்றுமதி எழுச்சி பெற்றுள்ளது.பின்னலாடை ஏற்றுமதி ஏப்., முதல் அக்., வரையிலான ஏழு மாதங்களில், நாட்டின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, 32 ஆயிரத்து 886 கோடியை எட்டியுள்ளது. இதில், திருப்பூரின் பங்களிப்பு, 16 ஆயிரத்து 420 கோடி ரூபாய்.அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகளாவிய நாடுகளில் இருந்து, இந்திய ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, 'ஆர்டர்'கள் அதிகளவில் வந்துகொண்டிருக்கின்றன. நிதியாண்டின் அடுத்த ஐந்து மாதங்கள், வர்த்தகம் மேலும் சிறப்பாக நடக்கும் என ஆடை ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE