பொது செய்தி

தமிழ்நாடு

மழை பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை

Updated : நவ 19, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய ஆறு அதிகாரிகள் அடங்கிய மத்திய குழு வரவுள்ளதாகவும், நிவாரணமாக மத்திய அரசிடம், 2,079 கோடி ரூபாய் கேட்டுள்ளதாகவும், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தி.மு.க., மூத்த எம்.பி.,யான பாலு, நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து அவரிடம்
மழை பாதிப்பு, ஆய்வு , மத்திய குழு ,தமிழகம் வருகை

கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய ஆறு அதிகாரிகள் அடங்கிய மத்திய குழு வரவுள்ளதாகவும், நிவாரணமாக மத்திய அரசிடம், 2,079 கோடி ரூபாய் கேட்டுள்ளதாகவும்,
தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தி.மு.க., மூத்த எம்.பி.,யான பாலு, நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து அவரிடம் விளக்கம் அளித்தார். பின் செய்தியாளர்களிடம் பாலு கூறியதாவது:தமிழகத்தில் பெய்த கன மழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதுடன், மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறி ஆகி உள்ளது.


கூடுதல் மழைபலத்த மழை கொட்டிய 25 மாவட்டங்களில், 15 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் 9,600 குடிசைகள், 2,200 வீடுகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளன. அத்துடன் 50 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் பயிர்கள் நாசமடைந்துள்ளன. இதில் 526 ஹெக்டேரில் இருந்தவை தோட்டக்கலை பயிர்கள். மழை பாதிப்பால் 54 பேர்
பலியாகி உள்ளனர்.சராரியை விட கூடுதல் மழை பெய்துள்ளதே பாதிப்பிற்கான காரணம், எனவே மத்திய அரசின் நிவாரண நிதி அவசியமாகிறது. தமிழக அரசின் மதிப்பீட்டின்படி 2,079 கோடி ரூபாய் வரை மத்திய அரசு வழங்க வேண்டும். அதில் முதற்கட்டமாக 550 கோடி ரூபாரயை உடனடியாக வழங்கினால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும்.


நிவாரண தொகைஇதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சரிடம் கூறினேன். தமிழகத்தின் மழை மற்றும் வெள்ள நிலவரங்களை கவனித்து வருவதாக அவர் கூறினார். மேலும் மத்திய அரசின் உயர்
அதிகாரிகள் ஆறு பேர் அடங்கிய குழுவை உடனடியாக அனுப்புவதாகவும் தெரிவித்தார்.அதிகாரிகள் குழு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நிவாரண தொகை குறித்து முடிவு செய்யப்படும் என அமித் ஷா கூறினார்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-நவ-202122:12:42 IST Report Abuse
Kasimani Baskaran 1.76 லட்சம் கோடி கேட்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
18-நவ-202110:10:12 IST Report Abuse
sankaranarayanan தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கும் தமிழக முதல்வர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சேதத்தைப்பற்றி ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுடன் திருப்பதி சென்று அந்த சந்தர்ப்பத்தில் பேசியிருந்தால் விடி மோட்சம் சற்று கிடைத்திருக்கும். கண் கேட்டபின் சூரிய நமஸ்காம் செய்து என்ன பயன்? டெல்லி சென்றபோது பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் அமித்ஷாவையும், - நிதி அமைச்சர் நிர்மலா ஸீதாராமனையும் சந்திக்காமல், சோனியாவை முக்கியாக சந்தித்து திரும்பினார். அதற்கு ஏற்றாற்போலத்தான் விளைவுகளும் வரும். நம் கண்ணை நாமே குத்திக்கொண்டதுபோலத்தான். இனி அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள். இவருடைய தர்பார் அரசியலுக்கு ஒன்றிய அரசு பணியாது. மக்களுக்கு ஏமாற்றமே காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளமால், வீம்புக்காக, திருப்பதி சென்றால் பாலாஜியை பார்க்க நேரிடுமோ என்ற பயம்- கவலை யாருக்கு? இவர் ஒன்றிய அரசை, கேட்ட தொகையில் பத்து சதவீதம் கொடுத்தாலே பெருமிதம்தான் தமிழ் நாட்டின் தலையெழுத்தை மாற்றவே முடியவில்லை
Rate this:
Cancel
RAJ - dammam,சவுதி அரேபியா
18-நவ-202108:31:57 IST Report Abuse
RAJ This is another joke every year. Wasting time. Everyone is watching the news on daily basis and all aware the measure of disaster. Then why should have a visit? Better take an action instead of wasting g time.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X