தமிழ்நாடு

அரசாணைக்கு மாறாக இயக்குனர்கள் நியமனம்: 'ஸ்மார்ட் சிட்டி' அதிகாரிகளுக்கு சிக்கல்

Updated : நவ 18, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
தமிழகத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், அரசாணைப்படி இயக்குனர்களை நியமிக்காமல், அமைச்சருக்கு வேண்டியவர்களை நியமித்து பல ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், தமிழகத்தில் 11 மாநகராட்சிகளில் ரூ.17 ஆயிரத்து 590 கோடி மதிப்பிலான, 624 திட்டங்களை நிறைவேற்ற, மத்திய நகர்ப்புற

தமிழகத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், அரசாணைப்படி இயக்குனர்களை நியமிக்காமல், அமைச்சருக்கு வேண்டியவர்களை நியமித்து பல ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், தமிழகத்தில் 11 மாநகராட்சிகளில் ரூ.17 ஆயிரத்து 590 கோடி மதிப்பிலான, 624 திட்டங்களை நிறைவேற்ற, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில், 250க்கும் குறைவான திட்டங்களே முடிக்கப்பட்டுள்ளன.இந்தத் திட்டங்களில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, இதுபற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.இத்திட்டம் குறித்த ஆவணங்களை ஏற்கனவே பரிசீலித்துள்ள தமிழக அரசு, இதில் என்னென்ன விதமான விதிமீறல், முறைகேடு, ஊழல் நடந்துள்ளன என்பதைப் பட்டியலிடத் துவங்கியுள்ளது. அதில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனத்தில் அரசாணைப்படி இயக்குனர்கள் நியமிக்கப்படவில்லை என்பது முதலில் கண்டறியப்பட்டுள்ளது.latest tamil news
சிறப்பு நிறுவனம்

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு சிறப்பு நிறுவனத்தை (SPV -Special Purpose Vehicle) உருவாக்குவது தொடர்பாக, தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 2016 மே 24ல் அரசாணை (எண்:77) வெளியிடப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் இத்திட்டத்தின் பணிகளைச் செயல்படுத்துவதற்காக 'கோயம்புத்துார் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்' என்ற பெயரில் சிறப்பு நோக்கத்துக்கான நிறுவனம் அதாவது 'எஸ்.பி.வி' அமைக்கப்பட்டுள்ளது. அந்த அரசாணையில், நகராட்சி நிர்வாக ஆணையரை தலைவராகவும், மாநகராட்சி கமிஷனரை நிர்வாக இயக்குநராகவும் கொண்ட 'போர்டு' அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


latest tamil newsஇவர்களைத் தவிர்த்து, தலைமை நிர்வாக அதிகாரி, மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை பிரதிநிதி, மாநகரப் பொறியாளர், தமிழக அரசின் நிதித்துறை பிரதிநிதி, மாநகர காவல்துறை போக்குவரத்து துணை கமிஷனர், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர், தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், மின் வாரிய கண்காணிப்புப் பொறியாளர், எல்காட் பிரதிநிதி, நகர்ப்புற வளர்ச்சி நிபுணர் ஒருவர், பெண் இயக்குனர் ஒருவர் என, 11 பேர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் கடந்த ஆட்சியின்போது, ஒன்பது பேர் மட்டுமே, கோவைக்கான 'ஸ்மார்ட் சிட்டி' போர்டு இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரியம், நகர்ப்புற கட்டமைப்பு நிதி நிறுவனம் மற்றும் எல்காட் சார்பிலான பிரதிநிதிகள் நியமிக்கப்படவே இல்லை.


புது விளக்கம்

இந்த அரசாணையில் இல்லாத மாநகராட்சி துணை கமிஷனரை, ஒரு இயக்குநராக நியமித்துள்ளனர். நகராட்சி நிர்வாக ஆணையர், தமிழக அரசின் நியமன இயக்குனர் (ஐ.ஏ.எஸ்., அதிகாரி), மாநகராட்சி கமிஷனர், துணை கமிஷனர், மாநகரப் பொறியாளர், பெண் இயக்குனர், தனி இயக்குனர் என பெரும்பான்மை இயக்குனர்கள், அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களே இருந்துள்ளனர்.இந்த விதிமீறலுக்கு அப்போது இந்தப் பொறுப்புகளில் இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளே காரணமாக இருந்துள்ளனர். இவர்கள்தான், கோவை மாநகராட்சியில், 1142 கோடி மதிப்பிலான 73 திட்டங்களுக்கு, ஒப்புதல் கொடுத்துள்ளனர். இதனால் 'ஸ்பெஷல் பர்பஸ் வெய்க்கிள்' என்பதையே 'எஸ்.பி.,வேலுமணி' திட்டமாக மாற்றி விட்டதாக, தற்போதுள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கிண்டலடிக்கின்றனர்.

இயக்குனர்கள் நியமனத்தில் துவங்கிய இந்த விதிமீறல், பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு வரை நீடித்துள்ளது. எனவே, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நடந்துள்ள ஊழல் குறித்த விசாரணையில் முறைகேடு உறுதி செய்யப்பட்டால், அப்போதிருந்த அமைச்சர் தண்டிக்கப்படுவதற்கு முன்பாக, அதற்கு உடந்தையாக இருந்த பல்வேறு அதிகாரிகளும் தண்டிக்கப்படுவது உறுதி

- நமது சிறப்பு நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RandharGuy - Kolkatta,இந்தியா
18-நவ-202110:16:43 IST Report Abuse
RandharGuy ஆட்டய போட அண்ணாமலையறாரேய உபாயம் .....கூட்டணியா ஆட்டைய போட்டுட்டு இப்ப வேஷம் போட்டுக்கினு திரியற ஆட்டுக்குட்டி .....மே ....மே....
Rate this:
Cancel
18-நவ-202109:29:34 IST Report Abuse
அப்புசாமி அட ஆட்டையப் போடற அதிகாரிங்களா... ஸ்மார்ட்டா ஆட்டையப் போட கத்துக்கோங்க... பிட்காயின்லே வாங்குங்க.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-நவ-202108:53:55 IST Report Abuse
Lion Drsekar இந்த நிகழ்வுக்கு முன்னாள் முக்கிய பிரமுகர் அழகான விளக்கம் அளித்துள்ளார் என்று நேற்றைய செய்தி இங்கு பொருந்தும். நம் மீது நடவடிக்கை எடுத்தால் அதில் ஒரு பங்குபெற்ற தற்போதைய நபர்களின் பெயர்களையும் கமிஷனில் ஆவணத்துடன் வெளியிடுவோம் இதில் மக்களுக்கு எல்லாமே தெரியவரும் ஆகவே நம் தொண்டர்கள் கவலையடையவேண்டாம் என்ற செய்தி ஒரு ஆறுதல் அளிக்கிறது, எல்லாமே ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பாடல்போல்தான், எல்லோருக்கும் எல்லாமே தெரியும் அதில் எல்லோருக்குமே எல்லா நிலைகளிலும் பங்கு இருப்பதால் ... வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X