பொது செய்தி

இந்தியா

ஷீரடி சாய்பாபா கோவிலில் முன்பதிவில்லா தரிசனம்

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஷீரடி-மஹாராஷ்டிராவின் ஷீரடி சாய்பாபா கோவிலில், முன்பதிவு இல்லாமல் தினசரி 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் கொரோனா பரவல் குறைவதை அடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதன்படி அகமது நகர்

ஷீரடி-மஹாராஷ்டிராவின் ஷீரடி சாய்பாபா கோவிலில், முன்பதிவு இல்லாமல் தினசரி 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது



latest tamil news


.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் கொரோனா பரவல் குறைவதை அடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதன்படி அகமது நகர் மாவட்டம் ஷீரடி சாய்பாபா கோவிலில் அக்டோபர் 6ம் தேதி முதல் 'ஆன்லைன்' முன்பதிவு வாயிலாக தினந்தோறும் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


latest tamil news


அடுத்ததாக நேரடியாக வரும் பக்தர்களில், தினசரி 10 ஆயிரம் பேரை தரிசனத்திற்கு அனுமதிப்பது என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஆதார் அட்டையை காண்பிக்கும் பக்தர்களுக்கு இலவச அனுமதி 'டோக்கன்' வழங்கும் சிறப்பு 'கவுன்டர்கள்' கோவில் நிர்வாகம் தரப்பில் அமைக்கப்படுகின்றன.ஆன்லைன் முன்பதிவும் தொடரும் என்பதால், நாள்தோறும் 25 ஆயிரம் பக்தர்கள் சாய்பாபாவை தரிசிக்கலாம். இந்த அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veluvenkatesh - Coimbatore,இந்தியா
18-நவ-202111:14:17 IST Report Abuse
Veluvenkatesh நன்றி, மிகவும் நல்ல செய்திங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X