சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மந்திரி துரைமுருகன் தொகுதியில் வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்

Added : நவ 18, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
வேலுார்:அமைச்சர் துரைமுருகனின் காட்பாடி தொகுதியில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், வேலுார் மாவட்டம், காட்பாடி சட்டசபை தொகுதி யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இங்கு நேற்று முன்தினம் இரவு 8:00 மணி முதல் நேற்று காலை, 8:00 வரை, 7.1 செ.மீ., மழை பெய்தது.காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பல பகுதிகளில் வீடுகளில் வெள்ள
 மந்திரி துரைமுருகன் தொகுதியில் வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்

வேலுார்:அமைச்சர் துரைமுருகனின் காட்பாடி தொகுதியில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், வேலுார் மாவட்டம், காட்பாடி சட்டசபை தொகுதி யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இங்கு நேற்று முன்தினம் இரவு 8:00 மணி முதல் நேற்று காலை, 8:00 வரை, 7.1 செ.மீ., மழை பெய்தது.காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பல பகுதிகளில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. தாராபடவேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் புகுந்தது.ஊழியர்கள் அதை வெளியேற்றிய போது, அங்குள்ள தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து சுவற்றில் ஷாக் அடித்ததால், நோயாளிகள், டாக்டர், செவிலியர்கள் வெளியே ஓடினர்.

மின் துறையினர், மின் இணைப்பை துண்டித்து ஷாக் அடிப்பதை சரி செய்தனர்.வி.ஜி.ராவ் நகர் 'ஏ' செக்டர் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குள் தண்ணீர் புகுந்ததால் அரிசி, சர்க்கரை நாசமானது. கடையை மூடி விட்டு ஊழியர்கள் சென்றனர். அங்குள்ள சமுதாய கூடத்தில் பாம்புகள் புகுந்ததால் ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர்
.பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட திட்டமிட்டனர். தி.மு.க., நிர்வாகிகள் அவர்களிடம் சென்று, விரைவில் தண்ணீரை வெளியேற்றுவதாக சமாதானப்படுத்தினர். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்து தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்டார்.
வேலுார் மாநகராட்சியினர், மோட்டார் வைத்து தேங்கிய தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். ஊட்டியில் கன மழை நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.இரவு முழுதும் மழை தொடர்ந்தது. 200 வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

பஸ் ஸ்டாண்ட் பகுதியை மழை நீர் சூழ்ந்ததால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. படகு இல்ல சாலையில் தேங்கிய வெள்ளத்தில், சுற்றுலா வாகனம் சிக்கியது. இரண்டு மணிநேரம் போராடி மீட்கப்பட்டது.

பந்தலுாரில் தமிழக - கேரள வாகனங்கள் செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் கூறுகையில்,'மக்கள் அவசர தேவைக்கு, 1077 என்ற எண்ணில், 24 மணி நேரமும் அழைக்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிவாரண முகாம்களில் இரவில் தங்கி கொள்ளலாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
18-நவ-202119:59:33 IST Report Abuse
அம்பி ஐயர் என் பையன் மாதிரி இங்கிலீஷ் பேச முடியுமா.... ஹிந்தி பேச முடியுமா....ன்னு உதார் விட்டவர தேர்ந்தெடுத்தால் இப்படித்தான் இருக்கும்.... இது வீடு தேடி வரும் தண்ணீர் திட்டம்.....
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
18-நவ-202113:28:47 IST Report Abuse
Girija அவர் மாளிகை பத்திரமாக உள்ளதா? அதுதான் முக்கியம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-நவ-202105:08:54 IST Report Abuse
J.V. Iyer அதைப்பற்றி அவருக்கென்ன கவலை? தேர்தலின்போது பணம் வாங்கி வோட்டு போட மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள் அவர் வீடு தண்ணீரில் மிதக்கதவரை நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X