தமிழ்நாடு

'கோவை மக்கள் சபையில் 1.41 லட்சம் மனுக்கள்'

Added : நவ 18, 2021
Share
Advertisement
வடவள்ளி: கோவையில் நடந்த மக்கள் சபை நிகழ்ச்சியில், 1.41 லட்சம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.கோவை வடவள்ளி, வீரகேரளம், பூசாரிபாளையத்தில், நேற்று இரவு, மக்கள் சபை நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றார்.நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''கடந்த, 30ம் தேதி முதல் 'மக்கள் சபை' நிகழ்ச்சி

வடவள்ளி: கோவையில் நடந்த மக்கள் சபை நிகழ்ச்சியில், 1.41 லட்சம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.கோவை வடவள்ளி, வீரகேரளம், பூசாரிபாளையத்தில், நேற்று இரவு, மக்கள் சபை நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றார்.நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''கடந்த, 30ம் தேதி முதல் 'மக்கள் சபை' நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறப்பட்டது. கோவையில், 25 ஆயிரம் மனுக்கள் பெறப்படும் என நினைத்தோம். ஆனால், மாநகராட்சியில் உள்ள, 100 வார்டுகள், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், 50 இடங்களிலும் என, 150 இடங்களில் நடந்த நிகழ்ச்சியில், மொத்தம், ஒரு லட்சத்து, 41 ஆயிரத்து, 351 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. சாலை, குடிநீர், கழிவுநீர் வடிகால் என, அடிப்படை வசதிகள் கோரி மனு அளித்துள்ளனர். அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X